Tuesday, January 14, 2014

இலங்கை துணை தூதருடன் மீனவர் பிரதிநிதிகள் சந்திப்பு!

Tuesday, January 14, 2014
சென்னை::இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 275 பேர் இன்னும் விடுவிக்கப்படாமல் இலங்கை சிறையில் உள்ளனர். இவர்கள் பொங்கலுக்கு முன்பு விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் விடுதலையாகவில்லை.
இந்த நிலையில் மீனவர்கள் பிரச்சினை குறித்து பேச்சு வார்த்தை நடத்த இலங்கை மீன் வளத்துறை
? ரஜிதா சேனரத்னேஇன்று டெல்லி வருகிறார். அவருடன் இலங்கை சட்டம்_ கடற்படை வெளியுறவு_ அமைச்சக அதிகாரிகள் குழுவும் வருகிறது. இந்த குழுவினர் மீன்வளத் துறை பொறுப்பு வகிக்கும் மத்தியஅமைச்சரான விவசாயத் துறை மந்திரி சரத்பவாருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இதற்கிடையே இலங்கை அமைச்சர் ரஜிதா சேனரத்னே நேற்று நிருபர்களிடம் பேசும்போது, ''பேச்சுவார்த்தைக்கு முன்பாக இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படமாட்டார்கள்'' என்றார்.
இந்த நிலையில் நேற்று காலை, சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதர் முகம்மது சபருல்லாகானை மீனவர் பிரதிநிதிகள் சென்று சந்தித்தனர்.
தேசிய மீனவ பேரவை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான புதுச்சேரி இளங்கோ தலைமையில் 19 பேர் சந்திப்பில் இடம் பெற்றனர்.
இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுதலை செய்ய உரிய முயற்சி எடுக்க வேண்டும் என்றும் மனு கொடுத்தனர்.

No comments:

Post a Comment