Tuesday, January 14, 2014

சீனாவுக்கும் இலங்கைக்குமான நற்புறவினை மேம்படுத்து நட்புறவை பேணும் முகமாக சீன போர்க் கப்பல்கள் திருகோணமலை வந்துள்ளன!

Tuesday, January 14, 2014
இலங்கை::சீனாவின் இரண்டு போர்க் கப்பல்கள் நேற்று (13.01.14) திருகோணமலை சீனக்குடா அஷ்ரப் இறங்கு துறைமுகத்தினை சென்றடைந்துள்ளன.

சீனாவுக்கும் இலங்கைக்குமான நற்புறவினை மேம்படுத்துவதினை நோக்கமாகக் கொண்டே இக்கப்ல்கள் இரண்டும் இலங்கை சென்றுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும்.
ஜிம்ஜம்பா (999) என்னும் கப்பல் 210 மீற்றர் நீளம் கொண்டதாகும்.  மற்றையது கென்சு (572) என்னும் கப்பல் 134.1 மீற்றர் நீளம் கொண்டது. இவ்விரண்டு கப்பல்களிலும் 680 உதவியாளர்கள் உள்ளனர்.
 

No comments:

Post a Comment