Wednesday, January 1, 2014

விஜயகாந்துடன் பேசியது என்ன? : ஜி.கே.வாசன் பேட்டி!

Wednesday, January 01, 2014
சென்னை::சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு இன்று காலை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வந்தார். அவருக்கு தமிழக காங்கிரஸ்  தலைவர் ஞானதேசிகன், மூத்த தலைவர் குமரி அனந்தன், மாவட்ட தலைவர் ராயபுரம் மனோ, முன்னாள் எம்பி ராணி, வில்லிவாக்கம் சுரேஷ், சிரஞ்சீவி, ரவி ஆகியோர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
 
பின்னர் நிருபர்களிடம் வாசன் கூறியதாவது: தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என்று மத்திய அரசு பேசிக்கொண்டு இருக்கும்போதே மீனவர்கள் தாக்கப்படுகின்றனர். இலங்கை கடற்படையின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் பிரச்னையை தமிழக கட்சிகள் அரசியல் ஆக்கக்கூடாது. இந்த விஷயத்தில் மத்திய அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது.

விஜயகாந்த் தமிழ் திரையுலகில் தனி முத்திரை பதித்தவர். அவரது மகனை சினிமாவில் அறிமுகம் செய்துள்ளார். அதற்கு வாழ்த்து சொல்வதற்காக விஜயகாந்தை சந்தித்தேன். அப்போது மத்திய, மாநில அரசுகளின் நிலைமை மற்றும் இன்றைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து விஜயகாந்த்துடன் ஆலோசனை நடத்தினேன்.இவ்வாறு வாசன் கூறினார்.

No comments:

Post a Comment