Friday, January 03, 2014
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் வட மாகாண
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை (02.01.14) இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது இருவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது இருவரும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
வடமாகாண சபையின் நிர்வாக பிரச்சினைகள்
தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஜனாதிபதியின் கவனத்திற்கு
கொண்டுவந்துடன் வடமாகாண சபையின் எதிர்கால நிர்வாக செயற்பாடுகள் குறித்தும்
கலந்துரையாடியதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சரவை
செயலாளர் சுமித் அபேசிங், நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர
ஆகியோரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற
உறுப்பினர் எம்.சுமந்திரன் பிரசன்னமாகி இருந்தனர்.
வடமாகாண நிர்வாக சிக்கல்கள் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசிய முதலமைச்சர்
எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வடமாகாண சபையின் நிர்வாகம் தொடர்பாகவும்
பேசியுள்ளார்.
இதனிடையே, கடல்சார் பல்கலைக்கழகத்தில் கடல்சார் மற்றும் தொழினுட்ப பாடநெறியை பூர்த்தி செய்து ஆக்கபூர்மான பயிற்சிகளை பெற்ற மாணவர் குழுவொன்றுக்கு ஜனாதிபதி சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
கடல்சார் பயிற்சிநெறிக்காக வருடமொன்றிற்கு 7 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.


No comments:
Post a Comment