Friday, January 3, 2014

ஜெனீவா மாநாட்டின் நிமித்தம் சர்வதேச சதிகாரர்களின் கவனம் இலங்கை மீது திரும்பியுள்ளது!

Friday, January 03, 2014
இலங்கை::பொதுவாக மார்ச் மாதம் நெருங்கும் போது இலங்கைக்கு எதிரான, எல்.ரி.ரி.ஈ.யை ஆதரிக்கும் சதிகார கும்பல் கள் செயற்பட ஆரம்பிப்பதுண்டு. அதன் அடிப்படை யில் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கமரூன் நவம்பர் மாதத் தில் பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் போர்வையின் கீழ் எவரும் எதிர் பாராதவாறு யாழ்ப்பாணத்துக்குச் சென்று அரசாங்கத்துக்கு எதிரான மற்றும் ஜோடிக்கப்பட்ட தகவல்களைத் தேடிக்கொண்டு இங்கிரு ந்து சென்றார்.
 
லண்டன் சென்றவுடன் டேவிட் கமரூன் அந்நாட்டுப் பாராளு மன்றத்தில் இலங்கை அரசாங்கத்தை கண்டிக்கக்கூடிய ஒரு நீண்ட அறிக்கையை சமர்ப்பித்தார். இப்போது பிரிட்டனும் அமெரிக்கா வும் 3வது தடவையாக இலங்கைக்கு எதிராக ஒரு கண்டனப் பிரேரணையை ஜெனீவா மனித உரிமைகள் உச்சி மாநாட்டிற்கு சமர்ப்பிப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப் படுகிறது.
 
இதுபோன்று இலங்கைக்கு எதிரான சக்திகள் அடுத்த மூன்று மாதங்க ளுக்குள் சர்வதேச அரங்கில் நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேவையான ஆதாரங்களைத் திரட்டுவதற்காகவே இலங்கைக்கு பல முக்கியஸ்தர்களை அனுப்பி வைத்த வண்ணம் இருக்கின்றன.
 
இந்த முக்கியஸ்தர்களில் பெரும்பாலானோர் உல்லாசப் பயணி களுக்கான விசாவைப் பெற்றுத்தான் இலங்கைக்கு வருகிறார்கள். அதே அடிப்படையில் தன்னுடைய சிறுபிராயத் தோழிகளையும், உறவினர்களையும் பார்க்க வருகிறேன் என்ற போலிக் காரண த்தை முன்வைத்து கனடிய பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசனும் இலங்கைக்கு கடந்த மாதம் 28ம் திகதி வந்திறங்கினார்.
 
ராதிகா சிற்சபேசன் 1981ம் ஆண்டு டிசம்பர் 23ம் திகதியன்று யாழ்ப் பாணத்தில் பிறந்தார். பின்னர் அவரது குடும்பம் ராதிகாவுக்கு 5 வயதாக இருந்த போது கனடாவில் குடியேறி அங்கு கனடிய பிர ஜாவுரிமை பெறுவதற்கான தகுதியை சில வருடங்களில் பெற்றுக் கொண்டது.
 
கனடாவில் டொரன்டோ நகரத்துக்கு மேற்குப்பகுதியில் இருக்கும் மிஸி சுவாகா பிரதேசத்தில் குடியிருந்த ராதிகா டொரன்டோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர் அவர் தமிழ் மாணவர் சங்கத்தின் உப தலைவி பதவியை பொறுப்பேற்றுக் கொண்டவுடன் தமிழர்களின் வாக்குகளைப் பெறும் எண்ணத் துடன் புதிய ஜனநாயகக் கட்சி ராதிகா போன்றவர்களை தங்கள் கட்சியின் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தியது.
 
அவ்விதம் தனது அரசியலில் அடியெடுத்து வைத்த ராதிகா தனது நிலையைப் பலப்படுத்திக் கொண்டு அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினரானார். யாழ்ப்பாணத்தில் பிறந்து கனடாவுக்கு சென்று குடியேறி பின்னர் கனடிய பாராளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநா யகக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு 2009ம் ஆண்டிலும், 2011ம் ஆண்டிலும் கனடிய பாராளுமன்ற உறுப்பினராக 18,935 வாக்குகளுடன் ராதிகா சிற்சபேசன் தெரிவானார். இவர் பெற்ற வாக்குகள் விகிதாசாரப்படி 40.62 ஆகும்.
 
இவர் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை முன்வைத்து கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து தன்னை ஓர் அரசியல்வாதியாக மாற்றிக் கொண்டார்.
 
ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிரான குற்றச் சாட்டுக்களைக் கொண்டுவருவதற்கான ஆதாரங்களைத் திரட்டும் நோக்கத்துடன் தான் ராதிகா சிற்சபேசன் இலங்கை வந்துள்ளார். இலங்கையில் இவர் பொதுமக்களையும் தமிழ் அரசியல்வாதிகளையும் சந்தித்து இரகசிய பேச்சுவார்த்தைகளையும் நடத்தி இருக்கிறார்.
இவர் ஒரு தடவை கனடாவில் ஊடகவியலாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், யுத்தத்தின் இறுதி நாட்
களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை செய்வத ற்காக கனடாவில் சர்வ கட்சி மாநாடு ஒன்றையும் ஒழுங்கு செய்யவிருப்பதாக கூறியிருக்கிறார்.
இந்த எண்ணங்களை நிறைவேற்றுவதற்கு ஆதாரங்களைத் திரட்டு வதற்காகவே ராதிகா சிற்சபேசன் இங்கு வந்திருக்கிறார் என்பதை இப்போது ஊர்ஜிதம் செய்யக்கூடியதாக இருக்கிறது.
 
இவர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்வதாக இருந் தால் ராதிகா சிற்சபேசன் இலங்கை அரசாங்கத்துக்கு முன் கூட்டியே அறிவித்து அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் வந்திருக்க வேண்டும். அதைவிடுத்து இவ்விதம் எவருக்கும் தெரியாதவாறு இரகசியமாக வந்து தகவல்களைத் திரட்டுவது நியாயம் தானா என்றுநாம் இந்தப் பெண்மணியிடம் கேட்க விரும்புகிறோம்.
 
இவ்விதம் இங்கு வந்து சேர்ந்த ராதிகாவை இலங்கை அதிகாரிகள் வீட்டுக்காவலில் வைத்துவிட்டார்கள் என்ற வதந்தி ஒன்றையும் சில சதிகாரர்கள் இப்போது கிளப்பி விட்டுள்ளார்கள். இத்தகைய வதந்திகள் மூலம் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் பெரும் அபகீர்த்தி ஏற்படுத்துவதே இந்த சதிகாரர்களின் நோக்கமாகும்.
 
ராதிகா சிற்சபேசனை நாம் வீட்டுக்காவலில் வைக்கவில்லை. அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சுதந்திரமாக தங்கியிரு க்கிறார்’ என்று வடமாகாணத்திற்கான பிரதி பொலிஸ் மா அதிபர் ரோஷான் டயஸ் கூறியிருக்கிறார்.
 
இவ்விதம் சகல மட்டங்களிலும் இலங்கையின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு சதிகார கும்பல்கள் முயற்சி எடுத்தாலும் உண்மை என்றும் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

No comments:

Post a Comment