Thursday, January 2, 2014

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டம் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது!

Thursday, January 02, 2014
இலங்கை::ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டம் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் திருத்தி அமைக்கப்பட்ட ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தின் கீழ் இலங்கை நன்மை அடைய உள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு முதல் பத்து வருடங்களுக்கு இந்த சலுகைத் திட்டம் வழங்கப்பட உள்ளது.
குறைந்த மற்றும் குறைந்த மத்திய வருமான ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தின் கீழ் இந்த சலுகைத் திட்டம் வழங்கப்பட உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஏற்றுமதிகளுக்கு உதவிகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கையின் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

No comments:

Post a Comment