Friday, January 3, 2014

கொழும்பு சேரி வாழ் மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்களை பாதுகாப்புச் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ மேற்பார்வை!

Friday, January 03, 2014
இலங்கை::கொழும்பு சேரி வாழ் மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்களை பாதுகாப்புச் செயலாளர் மேற்பார்வை
குறைந்த வசதிகளுடன் நகர்ப்புற சேரிகளில் வாழும் மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் “மிஹிந்து சென்புர” வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் வேளைகள்  நேற்று  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ் வீட்டுத்தெகுதியின் நிர்மாணப்பணிகளை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று மேற்பார்வை செய்தார்.

செயலாளரது இம்மேற்பார்வை விஜயத்தின் போது 54 மற்றும் 66ஆம் தோட்டம், சிரில் சீ பெரேரா மாவத்தை, எதிரிசிங்க மாவத்தை, மாளிகாவத்தை, பிரதீபா மாவத்தை, சாலிமுல்லை போன்ற வீடமைப்புத் திட்டங்களை மேற்பார்வை செய்ததுடன் தேவையான ஆளோசனைகளையும் வழங்கினார்.மேலும் அப்பிரதேச மக்களுடனும் கலந்துரையாடி அவர்களது தேவைப்பாடுகளையும் கேட்டறிந்து கொண்டார்.

நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுவதுடன் சேரிகள்
அற்ற   நகரைக் கட்டியெழுப்புவதனூடாக சுகாதாரமான வாழ்க்கையை எற்படுத்திக் கொடுப்பதே இவ்வாரான திட்டங்களின் நோக்கமாகும். இதுவரை ஹேனமுல்ல, அலுத்மாவத்த,பெர்கசன் வீதி, சிரில் சீ பெரேரா மாவத்தை, எதிரிசிங்க மாவத்தை, மாளிகாவத்தை புகையிரத வீதி, எஸ்டேட் 31 உருகொட மாவத்தை, 54 மற்றும் 66ஆம் தோட்டம், கொலன்னாவ அரச தழிற்சாலைக்காணி, சாலிமுல்லை, மற்றும் அங்கோடை உட்பட பல்வேறு பகுதிகளிலும் வீடுகள் அமைத்துக் கொடுக்கு முகமாக கட்டுமான வேளைகள் முன்னெடுக்கப்பட்டவண்ணம் உள்ளன.  
 
மேற்படி வீடமைப்புத்திட்டத்தின் ஒவ்வொரு கட்டமும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளரின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் இடம் பெற்றுவருவதுடன் ஒவ்வொரு வீடும் தேவையான சகல அடிப்படை வசதிகளையும் கொண்டதாக அமைக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment