Monday, January 06, 2014
கேன்பெர்ரா::அண்டார்டிகா பனிப்பகுதியில் சிக்கிய ரஷ்ய, சீன கப்பல்களில் இருப்பவர்களை மீட்க, அமெரிக்க பனி உடைப்பு கப்பல் அங்கு விரைகிறது.
ரஷ்யாவைச் சேர்ந்த பனி உடைப்பு கப்பல் அகாடெமிக் சோகல்ஸ்கை மூலம், அந்நாட்டு விஞ்ஞானிகள், அண்டார்டிகா பகுதிக்கு ஆய்வுக்காக சென்றனர். இந்த கப்பல் கிறிஸ்துமஸ் முதல் நாளில் இருந்து அங்கு பனிப்பாறையில் சிக்கிக் கொண்டது. பனிப்பாறைகளை உடைக்க முடியாததால் கப்பல் தொடர்ந்து முன்னேற முடியவில்லை. இந்த கப்பலை மீட்க உதவி செய்யும்படி, சீன நிறுவனத்திடம் ரஷ்யா சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன்படி, சீனாவின், ஸ்நோ டிராகன் அண்டார்டிகா பகுதிக்கு விரைந்தது. ஆனால், கடும் பனிப்பாறையில் இந்த கப்பலும் சிக்கிக் கொண்டது.
தொடர்ந்து முன்னேற முடியாமல், பனிப்பகுதியில் சிக்கிக் கொண்ட இரு கப்பல்களிலும் சேர்த்து 120 பேர் வரை உள்ளனர். உணவுப் பொருட்கள் கையிருப்பு குறைந்து வருவதால், இரு கப்பலில் இருப்பவர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், 2 கப்பல்களிலும் இருப்பவர்களை காப்பாற்றுமாறு, அமெரிக்காவிடம் ஆஸ்திரேலியா, ரஷ்யா, சீன அரசுகள் சார்பில், கடந்த 3ம் தேதி முறைப்படி கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவின் கடலோர காவல் படையில் உள்ள பிரமாண்டமான பனி உடைப்பு கப்பலான, போலார் ஸ்டார் அண்டார்டிகாவுக்கு விரைந்துள்ளது.
முன்னதாக இக்கப்பல், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நின்று செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இப்போது கப்பலில் இருப்பவர்களுக்கு ஆபத்து உள்ளதால், நேரடியாக அக்கப்பல் அண்டார்டிகாவுக்கு விரைந்து கொண்டிருக்கிறது.உலகத்திலேயே மிகப்பெரிய பனி உடைப்பு கப்பலான, போலார் ஸ்டார் 122 மீட்டர் நீளம் கொண்டது. எவ்வளவு பெரிய பனிப்பாறைகள் குறுக்கிட்டாலும், அதை தகர்த்தெறியும் திறன் இதற்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment