Monday, January 6, 2014

இலங்கையில் இனங்ககளுக்கிடையில் இன்னுமொரு முரண்பாடு ஏற்படுமானால் முழு இலங்கையுமே பாரிய அழிவை சந்திக்க நேரும்: மேஜர் ஜெனரல் ஹத்துறுசிங்க!

Monday, January 06, 2014
இலங்கை::இலங்கையில் இனங்ககளுக்கிடையில் இன்னுமொரு முரண்பாடு ஏற்படுமானால் முழு இலங்கையுமே பாரிய அழிவை சந்திக்க நேரும். அவ்வாறான முரண்பாடுகள் ஏற்படக் கூடாது என யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி பதவியிலிருந்து கொழும்புக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் மேஜர் ஜெனரல் ஹத்துறுசிங்க தெரிவித்தார்.
 
நாமெல்லோரும் ஒரே தேசத்தவர் என்ற எண்ணத்துடன் ஐக்கிய இலங்கைக்கு அனைத்து சமூகங்களும் ஒன்றுபட்டு வாழவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
இடமாற்றும் பெற்றுச் செல்லும் ஹத்துறுசிங்கவுக்கான பிரியாவிடை நிகழ்வு பலாலி பாதுகாப்பு தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பேச்சின் ஆரம்பத்திலேயே கடந்த நான்கு வருட காலமாக யாழ்.மாவட்டத்தின் இராணுவத் தளபதியாக இருந்தபோதும் தமிழில் உரையாற்ற முடியாததனையிட்டு மிகுந்த   மனவருத்தம் அடைவதாகவும் அதற்காக அனைவரிடமும் மன்னிப்புக் கோருவதாகவும் ஹத்துறுவிங்க கூறினார். சில சந்தர்ப்பங்களில் தமிழை விளங்கிக் கொள்ள முடிகின்றது. ஆனால் பேச முடியவில்லை. எனினும் தமிழைக் கற்றுக்கொள்வதில் நான் ஆர்வமாகவே இருக்கிறேன் எனவும் அவர் கூறினார்.
இறுதிக்கப்பட்டப் போரில் பாரிய விளைவுகளை இங்குள்ள மக்கள் சந்தித்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தேவைகள் இருந்தன. எதிர்பார்ப்புக்கள் இருந்தன. அதனை அறிந்து மக்களுக்கு உதவும் செயற்பாட்டில் நாம் ஈடுபட்டோம்.
இந்த நிலையில் இங்குள்ள மக்களிடம் இராணுவம் குறித்த எதிர்மறையான எண்ணங்கள் இருந்தன. அழிவுகளுக்கு இராணுவமே காரணம் என்ற கருத்து வேறூன்றி இருந்தது. இந்நிலையில் அந்த எண்ணத்தை மாற்றி இராணுவத்துக்கும்- பொதுமக்களுக்குமிடையில் நல்லுறவை மேம்படுத்தவேண்டிய தேவையும் இருந்தது எனவும் ஹத்துறுசிங்க கூறினார்.
அதற்கமைய பொதுமக்கள் தொடர்பு சிவில் காரியாலயங்களை அமைத்தும் கிராம மட்டங்களில் பொதுமக்களிடையே வலுவான உறவை ஏற்படுத்தும் நிகழ்ச்சிதம் திட்டங்கங்களை வகுத்தும் செயற்பட்டோம் எனவும் ஹத்துறுசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment