Tuesday, January 7, 2014

வடக்கு மாகாணசபையின் உள்ளக இடமாற்றங்கள் இம்மாத இறுதியினுள் அமல்!

Tuesday, January 07, 2014
இலங்கை::வடமாகாணசபையின் அமைச்சு செயலர்களில் பெரும்பாலானவர்கள் இம்மாத இறுதியுடன் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதிக்கும், முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனிற்குமிடையே இடம்பெற்ற பேச்சுக்களின் தொடர்ச்சியாகவே இவ்விடமாற்றங்கள் நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது.
 
அதே வேளை வடக்கு மாகாண பிரதம செயலாளர் இடமாற்றம் செய்யப்பட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்படவுள்ளார்.
 
அவரது இடத்திற்கு ஏற்கனவே பிரதம செயலராக நியமிக்கப்படவுள்ளதாகப் பேசப்பட்ட திருவாகரன் நியமிக்கப்படவுள்ளார். இதனிடையே வடக்கு ஆளுநர் சந்திரசிறியினை கடந்த சனிக்கிழமை அவசர அவசரமாக அழைத்துள்ள மஹிந்த வடக்கு முதல்வருடன் இணைந்து செயற்பட ஆலோசனைகளை முன்வைத்ததாக கூறப்படுகின்றது.
 
எதிர்வரும் ஜீன் மாதம் வரையினில் ஆளுநர் மாற்றப்படமாட்டாரென்ற தகவலை உறுதிப்படுத்தியுள்ளதுடன் தனது செயலாளர் லலித் வீரதுங்காவினால் கையளிக்கப்படும் உள்ள அதிகாரிகள் இடமாற்றத்தினை செய்யவும் பணித்ததாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment