Tuesday, January 7, 2014

யுத்தத்தால் அங்கவீனர்களாகக்ப்பட்டவர்கள் மற்றும் விசேட தேவைடையவர்கள் தொடர்பாக வடக்கில் விசேட கணக்கெடுப்பு!

Tuesday 7th January, 2014
இலங்கை::யுத்தத்தால் அங்கவீனர்களாகக்ப்பட்டவர்கள் மற்றும் விசேட தேவைடையவர்கள் தொடர்பாக வடக்கில் விசேட கணக்கெடுப்புக்களை ஆரம்பித்துள்ளதாக வடக்கு மாகாண சபையின்  சுகாதார அமைச்சர் வைத்திய காலநிதி ஆ.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இந்த நடவடிக்கைக்கு மாகாணத்திலுள்ள அனைத்துத் தரப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
யுத்தத்தால் வடக்கின் சுகாதாரத் துறை முற்றாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது     இங்கு இடம்பெற்ற யுத்தகாலத்திலும் அதற்குப் பின்னரான காலத்திலும் சுகாதாரத் துறையில் பாரிய இடைவெளி ஏற்பட்டிருந்ததால் சுகாதாரத் துறை மேம்படுத்துவதற்கு போதுமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத நிலை இருந்தது..
 
இந்நிலையில் இந்தப் பிரதேசங்களில் சுகாதாரத் துறையை மேம்படுத்த வேண்டிய பாரிய  பொறுப்பு எமக்கிருக்கின்றது. இதற்கமையவே வடக்கு மாகாண சபையினூடாக மேற்கொள்ளக் கூடிய பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம்.
குறிப்பாக முள்ளந் தண்டு பாதிக்கப்பட்டவர்களை பாராமரிப்பதற்காக பராமரிப்பு இல்லத்தை வவுனியாவில் அமைத்து பராமரிக்க உள்ளதோடு இதே போன்று வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் இந்த பராமரிப்பு நிலையங்களையும் அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்.
 
இதே போன்று யுத்தத்தால் அங்கவீனர்களாக்கப்பட்டவர்கள் மற்றும் இயற்கையாகவே பாதிக்கப்பட்டு விசேட தேவைடையவர்களாக இருக்கின்றவர்கள் இந்த இரண்டு தரப்பினர்களும் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
 
இதில் குறிப்பாக நாட்டிலுள்ள ஏனைய மாகாண சபைகளுடன் ஒப்பிடுகையில் வடக்கு கிழக்கு மாகாணத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் யுத்தத்தால் அங்கவீனர்களாக்கப்பட்டவர்களே அதிகளவானோர் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இதற்கமைய அவர்களுடைய நலன்களைக் கருத்திற்கொண்டு மாகாணத்திலுள்ளவர்களின் எண்ணிக்கையினை கணக்கெடுத்து வருகிறோம். இதனூடக பாதிக்கப்பட்டவர்களுயை வாழ்வை வளப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்.
 
மாகாணத்தின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு மாகாண சபையினூடக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் சத்தியலிங்கம் இருந்தும் வடக்கின் சுகாதாரத் துறை மேம்பாட்டிற்கு நீண்ட காலத் திட்டமிடலொன்றை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பினை தெரிவித்துள்ளதுடன் இந்நடவடிக்கை தமிழ் சமுகத்தின் வரலாற்றுப் பாரம்பரியத்தை சிதைக்கும் மோசமான நடவடிக்கை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

No comments:

Post a Comment