Saturday, January 11, 2014

நீதித்துறை பணம் சம்பாதிப்பதற்கான துறையல்ல , அச்சேவையைச் சரியாகச் செய்வதற்கு சகலரும் முன்வரவேண்டும்: பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ்!

ss1129Saturday, January 11, 2014
இலங்கை::நீதித்துறை பணம் சம்பாதிப்பதற்கான துறையல்ல , அச்சேவையைச் சரியாகச் செய்வதற்கு
நீதித்துறையிலுள்ள சகலரும் முன்வரவேண்டும் . பணத்தினை மட்டும் இலக்காகக் கொண்டு செயற்படாது சேவையையும் இலக்காகக் கொண்டு சட்டத்தரணிகள் சேவையாற்ற முன்வரவேண்டும் என பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் தெரிவித்தார் .
யாழ் . மல்லாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீதிமன்றக் கட்டடத் தொகுதியை நேற்று முன்தினம் வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
 அவர் மேலும் தெரிவிக்கையில்:-
பணத்திற்காக கறுப்பு அங்கி அணிந்தவர்களால் நீதித்துறை பாதிப்படைந்துள்ளது . பணத்தை சம்பாதிப்பதில் தப்பில்லை . ஆனால் அது உழைப்புக்கான அடிப்படை சேவையாக இருக்கவேண்டும் . இந்த நாட்டில் வாழுகின்ற நாம் எல்லோரும் ஒரே குடும்பமாக வாழவேண்டும் . சட்டத்தின் ஆட்சியை அடைவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் .
நீதித்துறையில் உள்ளோர் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டாம் . கறுப்புடை அணிந்த அனைவரும் நீதியை நிலைநாட்ட வேண்டியவர்கள் . நீதிக்காக பாடுபட வேண்டியவர்கள் . இப்பொறுப்பிலிருந்து நாம் நழுவ முடியுமா ? நம்பிக்கைக்குக் குறைவாக நடக்கமுடியுமா ? எனச் சிந்திக்க வேண்டியவர்களாகவுள்ளோம் .
பணத்திற்காக மட்டுமே நீதித்துறையில் தங்கியிருக்கின்றீர்கள் என்றால் நீங்கள் இருக்கின்ற நீதித்துறை மோசமானது என்றே கூறவேண்டியுள்ளது .
சட்டத்தை நீதித்துறையில் பணியாற்றுகின்றவர்களே மதிக்காவிடின் சட்டம் வலுவிழந்து விடும் .
எனவே சமூகப் பிரதிநிதிகளாக நீங்கள் சட்டத்தைக் கையிலெடுத்து சிறப்பாக ஏனையோர் மதிக்கத்தக்க வகையில் நம்பிக்கைக்குப் பாத்திரமாகச் செயற்படவேண்டும் .
சட்டஆட்சியைப் பாதுகாக்கின்ற வகையிலான அனைத்து செயற்பாடுகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம் . அதற்காக நாம் அனைவரும் கூட்டாக இணைந்து செயற்படவேண்டும் . சட்ட ஆட்சியை நிலைநிறுத்த எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றார் .
 

No comments:

Post a Comment