Sunday, January 12, 2014
சென்னை::தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையை கட்டிக்
காப்பதில் அ.தி.மு.க. அரசு எப்போதும் போல் முழு முனைப்புடன் செயல்படும்
என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா
விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:_
எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு ஏழை,
எளிய மக்களின் பாதுகாவலனாகவும், மீனவர்களின் நண்பனாகவும் திகழ்ந்து
வருகிறது.
மீன்பிடி தடை காலங்களில் தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 1000 ரூபாய் மாத உதவித் தொகை 2,000 ரூபாய் என உயர்த்தி வழங்கியதோடு, மீன்பிடிப்பு குறைந்த காலங்களில் 4,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் நான் உருவாக்கினேன். கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அயல் நாட்டவரால் சிறைபிடிக்கப்படும் போது, அவர்கள் தாயகம் திரும்பும் வரை பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவித் தொகையை
50 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக நான் உயர்த்தி வழங்கினேன். இந்த அடிப்படையில், நடப்பு நிதியாண்டில் மீனவக் குடும்பங்களுக்கு 30 லட்சத்து 26 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.
இதுவன்றி, ஒடிசா புயலில் சிக்கித் தவித்த 18 மீனவர்களை பத்திரமாக மீட்டு அவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் உதவி வழங்கியது. ஈரான் நாட்டு சிறையில் வாடிக் கொண்டிருந்த 16 மீனவர்களை மீட்டதோடு அவர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்கியது என அடுக்கிக் கொண்டே போகும் அளவுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி மீனவர்களைக் காக்கும் அரணாக எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் போது பாரதப் பிரதமருக்கு உடனுக்குடன் கடிதங்கள் எழுதி, தூதரக நடவடிக்கைகள் மூலம் அவர்கள் மீட்கப்பட துரித நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்துள்ளது. இதன் காரணமாகத்தான் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1,111 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட போதும், 836 மீனவர்கள் துரிதமாக விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்னமும்
275 மீனவர்கள் இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை மீட்பதற்கு தூதரக அளிவில் துரித நடவடிக்கை எடுக்கும்படி நான் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் கச்சத் தீவையும், அதை சுற்றியுள்ள பகுதியையும் இலங்கைக்கு தாரைவார்த்தது தான். எனவே தான், கச்சத் தீவை மீட்டெடுக்க நான் அயராது பாடுபட்டு வருகிறேன்.
இந்த நிலையில், "தமிழக மீனவர்களின் துயர் தீராததற்கு யார் காரணம்?'' என்ற தலைப்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை படித்துப் பார்க்கும் போது, "குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போல்'' என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.
ஆட்சியில் இருந்தால் ஒரு நிலை, ஆட்சியில் இல்லாவிட்டால் ஒரு நிலை என இரட்டை வேடம் போடுவதும், பச்சோந்தி போல் தன்னுடைய நிலையை அடிக்கடி மாற்றிக் கொள்வதும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கைவந்த கலை.
1996_ஆம் ஆண்டு முதல் 1998_ஆம் ஆண்டு வரை, மற்றும் 1999_ஆம் ஆண்டு முதல் 2013_ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 17 ஆண்டுகள் மத்திய கூட்டணி அரசில் பங்கு வகித்த போதும் சரி, 2006_ஆம் ஆண்டு முதல் 2011_ஆம் ஆண்டு வரை மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் முதலமைச்சராக இருந்த போதும் சரி, தமிழக மீனவர்களுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதவர் கருணாநிதி.
மாறாக, தமிழக மீனவர்களை "பேராசைப் பிடித்தவர்கள்'' என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலேயே பகிரங்கமாக அறிவித்தவர் கருணாநிதி.
இதே போன்று, ஆட்சியில் இருந்த போது கச்சத் தீவு தாரைவார்க்கப்படுவதை வலிமையாக எதிர்க்காமல் மென்மையான போக்கை கடைபிடித்த கருணாநிதி, கச்சத் தீவு பிரச்சனையில் கமுக்கமாக இருந்த கருணாநிதி, ஆட்சி பறிபோன பிறகு கச்சத் தீவு பிரச்சனையில் நான் தொடுத்துள்ள வழக்கின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் சாதகமான தீர்ப்பினை வழங்கிவிடுமோ என்ற அச்சத்தில் தற்போது கச்சத் தீவினை மீட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார்.
நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, கச்சத் தீவினை இலங்கை அரசுக்கு தாரைவார்த்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தில் 2008_ஆம் ஆண்டு நான் வழக்கு தொடுத்தேன். அதில் தமிழ்நாடு அரசையும் ஒரு பிரதிவாதியாக சேர்த்து இருந்தேன். ஆனால், தமிழகத்திற்கு சாதகமான எதிர் உறுதி ஆவணம் ஏதும் உச்ச நீதிமன்றத்தில் திரு. கருணாநிதியின் திமுக அரசால் தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக, மத்திய அரசு எவ்விதமான பதில் மனுவை தாக்கல் செய்கிறது என்பதைப் பார்த்து பின்னர் தமிழ்நாடு அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யலாம் என "கழுவுற மீனிலும் நழுவுற மீன்'' என்கின்ற பழமொழிக்கேற்ப முடிவு எடுத்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதற்கு மூல காரணமான கச்சத்தீவு தாரைவார்க்கப்படுவதற்கு உறுதுணையாக இருந்த கருணாநிதி, தற்போது தமிழக மீனவர்கள் பற்றி நீட்டி முழக்குவது நகைப்புக்குரியதாக உள்ளது.
கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், ஓர் ஆங்கிலத் தொலைக்காட்சி செய்தியை மேற்கோள் காட்டி, இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெறாததற்கு நான் தான் காரணம் என்று என் மீது குற்றம் சுமத்தி, மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்கி பேசியிருக்கிறார். கருணாநிதியின் இந்த அறிக்கை காங்கிரஸ் கட்சியுடன் உறவை புதுப்பித்துக் கொள்ள உதவுமே தவிர, மீனவர் பிரச்சனையை தீர்க்க வழி வகுக்காது என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
2010_ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மீன்வளத் துறை மற்றும் இந்திய கடலோரப் படை அதிகாரிகள் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மன்னார் தீவுக்கு வடக்கே இலங்கை கடலோரத்திலிருந்து மூன்று நாட்டிகல் மைல் வரையும், யாழ்ப்பாணம் பகுதியில் இலங்கை கடலோரத்திலிருந்து ஐந்து நாட்டிகல் மைல் வரையும் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கலாம் என்பது முடிவு செய்யப்பட்டது. எனினும், இதற்கு எந்த செயல்வடிவமும் இலங்கை அரசால் கொடுக்கப்படாத நிலையில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு வருகின்றனர்.
இரண்டாம் கட்டமாக 20.3.2011 மற்றும் 21.3.2011 ஆகிய நாட்களில் கொழும்புவில் இரு நாட்டு மீனவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்ட இலங்கை நாட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களது அரசியல் ஆதாயத்திற்காக இந்திய மீனவர்களை அடக்க முயற்சி செய்தார்கள் என்றும், எனவே அந்தக் கூட்டத்தில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிய வருகிறது. இந்தக் கூட்டத்தின் முடிவுகள் இன்னமும் மத்திய அரசால் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.
மத்திய அரசைப் பொறுத்தவரையில், தமிழக மீனவர்கள் பிரச்சனையில் ஓர் அலட்சியப் போக்குடன் தான் செயல்படுகிறது என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. பாரதப் பிரதமரால் எனக்கு எழுதப்பட்ட பல கடிதங்கள் இலங்கை மீனவர்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளன. உதாரணமாக, 16.3.2013 நாளிட்ட பாரதப் பிரதமரின் கடிதத்தில் “...there is clearly a need for creating greater awareness among fishermen to avoid crossing the maritime boundary for their own safety and security. …” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், தமிழக மீனவர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, கடல் எல்லையைத் தாண்டுவதை தமிழக மீனவர்கள் தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்பதாகும். இது, தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை விட்டுக் கொடுக்கும் செயல் ஆகும். இதை எப்படி ஏற்றுக்கொள்வது?
பாரதப் பிரதமரின் 6.6.2013 தேதிய கடிதத்தில், “... The Government of India considers its maritime boundary with Sri Lanka settled under the Agreements concluded with Sri Lanka in 1974 and 1976. …” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதாவது, தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை மேற்படி ஒப்பந்தங்களின் மூலம் காவு கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதற்கு யார் காரணம் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.
இருப்பினும், இரு நாட்டு மீனவர்களும் சந்தித்து பேசுவதற்கான ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென மீனவச் சங்கங்கள் என்னிடம் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், 2013_ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையினை சென்னையில் வைத்துக் கொள்ளலாம் என்றும்; இதற்குத் தேவையான அனுமதியினை அளிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுரை வழங்குமாறும், இலங்கை மீனவர்கள் சார்பில் கலந்து கொள்ளக் கூடியவர்களின் பட்டியலை முன்கூட்டியே அனுப்பி வைக்குமாறும் நான் பாரதப் பிரதமரை கேட்டுக் கொண்டு, 20.9.2013 அன்று ஓர் கடிதம் அனுப்பியிருந்தேன்.
அதன் பின்னர், என்னுடைய உத்தரவின் பேரில், தமிழ்நாடு அரசு தனது 23.12.2013 நாளிட்ட கடிதத்தில், இரு நாட்டு மீனவர் கூட்டத்தை சென்னையில் ஜனவரி மாதம் 20_ஆம் தேதி வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்து, அந்த கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் மற்றும் தமிழக மீனவர்கள் மற்றும் தமிழக அரசின் சார்பில் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வோர் விவரப் பட்டியலும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனைக் குறிப்பிட்டு, பேச்சுவார்த்தைக்கான சுமுக சூழ்நிலை ஏற்படுத்தி வரும் போது, தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டி, இலங்கை சிறையில் வாடி வரும் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி 30.12.2013 அன்று பிரதமருக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். அதன் அடிப்படையில், இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு தற்போது செய்து வருகிறது.
எனது உத்தரவின் பேரில், 20.1.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ள இரு நாட்டு மீனவர்கள் கூட்டம் தொடர்பாக தமிழக மீன்வளத் துறை செயலாளர் புது டெல்லியில் இந்திய அரசு அதிகாரிகளுடன் விவாதித்தார். அப்போது, இலங்கை சிறையில் வாடிக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் இந்தக் கூட்டத்திற்கு முன்பு விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில், இலங்கை சிறையில் வாடிக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை 13.1.2014 முதல் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய கடலோரக் காவல் படையால் கைது செய்யப்பட்டு தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ள 179 இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
எனவே, தமிழக சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை துவக்குமாறு நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இதன் அடிப்படையில், இலங்கையில் சிறையில் உள்ள 275 மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படுவார்கள். தமிழக அரசும் இலங்கை மீனவர்களை விடுவிக்கும்.
இத்தகைய சுமுகமான சூழ்நிலையில், 20.1.2014 அன்று தமிழக _ இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெறும். தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையை கட்டிக் காப்பதில் எனது தலைமையிலான அரசு எப்போதும் போல் முழு முனைப்புடன் செயல்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

.jpg)
No comments:
Post a Comment