Friday, January 24, 2014
புதுடெல்லி::தேர்தலுக்கு முன்னர் பிரதமர் வேட்பாளரை தேர்வு
செய்து அறிவிப்பது ஜனநாயக நடைமுறை ஆகாது, மாறாக அது வெறும்,தனி நபரை
பிரபலப்படுத்தும் முயற்சியாகும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி
தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் எம்.பி.க்கள் தன்னை பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுத்தால் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி பேசியதாவது: "மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், அதன் பின்னர் காங்கிரஸ் எம்.பி.க்கள் தன்னை பிரதமராக தேர்வு செய்தால் அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள தான் தயாராக இருக்கிறேன். கட்சிக்குள், பிரதமராவது யார் என தேர்வு செய்வது எம்.பி.க்கள் உரிமை. அதை அவர்களுக்கு அளிக்க வேண்டும். மன்மோகன் சிங், காங்கிரஸ் எம்.பி.க்களால் தான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அதே போல் என்னையும் தேர்வு செய்தால் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன்" என்றார்.
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட மாட்டார் என அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி கடந்த வாரம் அறிவித்தார்.
ஆனாலும், கட்சியினர் மத்தியில் ராகுல் பிரதமார் வேட்பாளராக முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

No comments:
Post a Comment