Thursday, January 23, 2014

இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்களை மார்ச் 4 ஆம் விசாரிக்க தீர்மானம்!

Thursday, January 23, 2014
இலங்கை::இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்களை மார்ச் 4 ஆம் எடுக்கவுள்ளதாக உயர்நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (22.01.14) தீர்மானித்தது.
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் நீதியரசர்களான சந்திரா ஏக்கநாயக்க,பீ.பி அலுவிஹார ஆகியோர் அடங்கிய நீதியரசர் குழு, இந்த மனுக்களின் நியாயத்தன்மை பற்றி, பிரதம நீதியரசர் முன்னிலையில்  விசாரிக்கப்படும் எனவும் தீர்மானித்தது.

இலங்கை தமிழரசு கட்சியினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் இலக்கு, நோக்கம் இலங்கையின் ஆள்புலத்தில் தனிநாடு அமைப்பதாகும்' என நீதிமன்றம் பிரகடனப்படுத்த வேண்டுமென இந்த மனுக்களிலும் கேட்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் இரா.சம்பந்தன், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோர் பிரதிவாதிகளாக இந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
 

No comments:

Post a Comment