Tuesday, December 10, 2013

கேமராவில் பதிவான மகாராணியின் ஆவி!!!

Tuesday 10 December 2013
லண்டன்::ராணியின் ஆவியை படம் பிடித்த சிறுவன் பிரிட்டனை சேர்ந்த, சிறுவன் எடுத்த போட்டோவில், ராணியின் ஆவி பதிவாகியுள்ளது.
 
பிரிட்டனின், நாட்டிங்ஹாம்ஷயர் பகுதியில், 150 ஏக்கர் பரப்பளவில், பூங்கா அமைந்துள்ளது; இங்கு, 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டட இடிபாடுகள், குழந்தைகளுக்கான விளையாட்டு கிராமம், சிற்பப் பாதைகள், மரப் பாலங்கள், உள்ளிட்டவை கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த கண்காட்சியை பார்க்க வந்த, கேமரூன் ஹாமில்டன், 15, என்ற மாணவன், பூங்காவின் பல்வேறு பகுதிகளை படமெடுத்தான். அப்போது, தான் எடுத்த போட்டோவில், ஒரு பெண்ணின் நிழல் போன்ற உருவம் பதிவாகியிருந்ததைக் கண்டு, அருகில் இருந்தவர்களிடம் காட்டினான்;
அவர்கள், ஹாமில்டனின் பேச்சை நம்ப மறுத்தனர். ஆனால், பூங்கா ஊழியர், இதுகுறித்து ஆச்சரியப்படவி"ல்லை. சாமர்செட் பகு
 
தியின் ராணியாக இருந்த, அர்பேலா ஸ்டூவர்ட்டின் ஆவி இந்த பூங்காவில், உலாவுவதாக, அந்த ஊழியர் தெரிவித்தார். கடந்த, 1615ல், லண்டன் கோபுரம் பகுதியில், அர்பேலா இறந்தார்; "இறந்து போன அர்பேலா, ஏழாவது ஹென்றியின் பேத்தி' என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆவியை படம் எடுத்த, ஹாமில்டன் கூறுகையில், ""பேய், ஆவிகள் குறித்த நம்பிக்கை இருந்தாலும், முதன் முறையாக, போட்டோவில் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது,'' என்றான்.

No comments:

Post a Comment