Thursday, December 19, 2013

தொண்டர் ஊழியர்களின் பிரச்சனை தொடர்பில் ஆராய சுகாதார அமைச்சின் அதிகாரிகள் யாழ விஜயம்!

Thursday, December 19, 2013
இலங்கை::நிரந்தர நியமனம் வழங்கக் கோரி யாழ் போதனாவைத்திய சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொண்டர் ஊழியர்கள் பிரச்சனை; தொடர்பில் ஆராய்வதற்கு,
 
சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழு ஒன்று இன்று  வியாழக்கிழமை யாழப்பாணம் வருகை தரவள்ளதாக யாழ் அபிவிருத்திக்குழுவின் தலைவரும் முன்னாள் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
 
கடந்த 06 வருடங்களுக்கு மேல் தொண்டர் ஊழியர்களாக கடமையாற்றி வரும் ஊழியர்கள் அரச நியமனத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதையடுத்து கடந்த ஆறு தினங்களாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
 
இந்த போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதையடுத்து இத்தொண்டர் ஊழியர்களின் பிரச்சனை குறித்து ஆராயும் பொருட்டு சுகாதார அமைச்சின் அதிகாரிகள் யாழ்ப்பாணம் வருகை தரவள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment