Thursday, December 19, 2013

நல்லெண்ண அடிப்படையில் இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த இரண்டு கப்பல்கள் இலங்கையில்!

Thursday, December 19, 2013
இலங்கை::இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த இரண்டு கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிட்டுள்ளன.

நல்லெண்ண அடிப்படையில் இந்த இரண்டு கப்பல்களும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விஸ்வாஸ்ட் மற்றும் ராஜ்கமல் ஆகிய இரண்டு கப்பல்களே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளன.

இந்த கரையோரப் பாதுகாப்பு கப்பல்கள் இலங்கையில் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் என கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

இலங்கை, மாலைதீவு மற்றும் இந்தியா மூன்று நாடுகளும் பங்கேற்கும் விசேட பயிற்சிகளில் இந்த இரண்டு கப்பல்களும் பங்கேற்க உள்ளன.

இரண்டு கப்பல்களிலும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் விஜயம் செய்துள்ளனர்.

இந்த இரண்டு கப்பல்களும் திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment