Tuesday, December 17, 2013
சென்னை::தி.மு.க., பொதுக்குழு விவாதமும், அதில் எடுக்கப்பட்ட முடிவும், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., வட்டாரத்தில் சூடான விவாதத்தை கிளப்பி உள்ளது. பா.ஜ., பற்றிய, கருணாநிதியின் விமர்சனமும், முடிவும், தி.மு.க.,வில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த, இரண்டு லோக்சபா தேர்தல், இரண்டு சட்டசபைத் தேர்தல்களில், நீடித்த காங்கிரஸ் - தி.மு.க., உறவு, இப்போது முறிந்துள்ளது. வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், "காங்கிரசுடன் கூட்டு சேரப் போவதில்லை' என, தி.மு.க., பொதுக்குழுவில் திட்டவட்டமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.தி.மு.க.,வின் இந்த முடிவுக்கு, முக்கிய காரணமாக கூறப்படுவது, "2ஜி' ஊழல் விவகாரம். இதுதொடர்பான குற்றச்சாட்டு, நடவடிக்கைகள் எல்லாம், தி.மு.க.,வினர் மீது மட்டுமே பாய்ந்துள்ளது. ராஜா, கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டதுடன், கோபாலபுரம் வீட்டையே, கோர்ட் ஆக மாற்றிய சம்பவம், தி.மு.க., தலைமைக்கு ஆறாத காயத்தை ஏற்படுத்தியது தான், உறவு முறிவுக்கு முக்கிய காரணம் என, கூறப்படுகிறது.
அதனால் தான், "காங்கிரசுடன் கூட்டணி இல்லை' என்ற முடிவை, தி.மு.க., அறிவித்தபோது, பொதுக்குழுவில், பலத்த கைத்தட்டல் எழுந்தது. இவ்வளவு பெரிய வரவேற்பை பார்த்து, மகிழ்ந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, அடுத்த வார்த்தை பேசுவதற்குள், கூட்டத்தினர் மத்தியில், "பா.ஜ.,வுடன் கூட்டு சேர வேண்டும்' என்ற குரல் ஒலித்தது. அதற்கு உடனடியாக பதிலளித்த கருணாநிதி, ""காங்கிரஸ் மீதுள்ள கோபத்தில், பா.ஜ.,வுடன் கூட்டு சேர வேண்டும் என, விரும்புகிறீர்கள். அந்த எண்ணம், உங்களுக்கு இருப்பது எனக்கும் தெரியும். ஆனால், வாஜ்பாய் காலத்து பா.ஜ., இப்போது இல்லை; இன்றைய பா.ஜ., அப்படி அல்ல; ஆர்.எஸ்.எஸ்., ஆதிக்கம் அதிகம். நம்மால், அதை கட்டுப்படுத்த முடியாது. அதனால், பா.ஜ.,வுடனும் கூட்டணி இல்லை,'' எனக் கூறியுள்ளார்.
இதற்கு, கூட்டத்தில் யாரும் கைத்தட்டவில்லை என்பதையும், நரேந்திர மோடியை விமர்சிக்க மறுத்ததையும் சுட்டிக்காட்டும் தி.மு.க.,வினர், "காங்கிரஸ் உறவை முறிப்பதற்கு, "2ஜி' போன்ற வலுவான காரணங்கள் உண்டு. ஆனால், பா.ஜ.,வுடன் கூட்டு சேர்வதற்கான வாய்ப்பை அலட்சியப்படுத்த, அதுபோன்ற காரணம் இல்லை. வாஜ்பாய் காலத்தை விட, மோடி காலத்தில் தான் பா.ஜ.,வுக்கு ஆதரவு அதிகம்; நான்கு மாநில தேர்தல் முடிவு, அதற்கு உதாரணம். எனவே, அந்த கட்சி வருகையை தடுக்க, கதவடைப்பு செய்யக் கூடாது என்பது தான், பெரும்பாலான, அடிமட்ட தொண்டர்களின் விருப்பமாக உள்ளது' என்கின்றனர்.இதை உணர்ந்து தானோ என்னவோ, பொதுக்குழுவில் பேசியதற்கு மாறாக, வெளியில் அளித்த பேட்டியில், பா.ஜ., கூட்டணி பற்றிய கேள்விக்கு, கருணாநிதி வேறு விதமாக பதில் அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால், பா.ஜ., மீதான தி.மு.க.,வினர் பார்வை இப்படி இருந்தாலும், தி.மு.க., முடிவுக்கு, தமிழக பா.ஜ., வரவேற்பும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:"காங்கிரசுடன் இனி கூட்டு இல்லை' என, தி.மு.க., எடுத்துள்ள முடிவை வரவேற்கிறோம். ஏனெனில், தமிழகத்தில், காங்கிரசுடன் கூட்டு சேரும் கட்சியும் அழிந்து விடும். அதனால், அந்த முடிவு சரியானது. அதேநேரத்தில், பா.ஜ., பற்றிய கருணாநிதியின் விமர்சனம் தவறு. வாஜ்பாய் காலத்து பா.ஜ., தான், இப்போதும் இருக்கிறது. அவர் நடந்து சென்ற பாதையில், அவரது வழிகாட்டுதலோடு தான், இன்றைக்கும் பா.ஜ., செயல்படுகிறது. அதனால், வாஜ்பாய் காலத்து பா.ஜ., இப்போது இல்லை எனக் கூறுவதை ஏற்க முடியாது."

அண்ணாதுரை காலத்து தி.மு.க., இப்போது இல்லை' என நாங்கள் கூறினால், அதை கருணாநிதி ஒப்புக்கொள்வாரா? இவ்வாறு, அவர் கூறினார்.
இதற்கிடையில், தி.மு.க.,வின் முடிவு, தமிழக காங்கிரசில், ஒரு தரப்புக்கு மட்டுமே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்சியில், மத்திய அமைச்சர் வாசன், முன்னாள் மாநில தலைவர் இளங்கோவன் ஆகியோர் இணைந்து செயல்படுகின்றனர். இவர்களது முயற்சியின் காரணமாக தான், ஏற்காடு இடைத்தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிக்க காங்., மேலிடம் மறுத்தது. இந்த இரு அணி ஆதரவாளர்களும், தி.மு.க., முடிவை வரவேற்பது போல கருத்து சொல்கின்றனர். இளங்கோவன், "தி.மு.க.,வின் முடிவு, காங்கிரசாருக்கு புத்தாண்டு பரிசு' என்று வெளிப்படையாக, விமர்சித்துள்ளார்.ஆனால், சிதம்பரம், தங்கபாலு, ஜெயந்தி நடராஜன் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிருப்தியில் இருக்கும் தி.மு.க.,வை சமாதானப்படுத்தி, லோக்சபா தேர்தலுக்குள் கூட்டணிக்கு தயார்படுத்தி விட வேண்டும் என்று நினைத்திருந்தனர்.ஆனால், அதற்குள் கருணாநிதி தன் முடிவை அறிவித்துள்ளது, அந்த வட்டாரத்தை கவலை அடைய செய்துள்ளது

No comments:
Post a Comment