Tuesday, December 17, 2013
ராமேஸ்வரம்::இலங்கையில் இருந்து, தனுஷ்கோடியில் ஊடுருவிய, மர்ம நபர்களை பிடிக்க,
இரவு முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இலங்கையிலிருந்து படகில் வந்த,
நான்கு பேர், டிச., 15 இரவில், தனுஷ்கோடி அருகே, அரிச்சல்முனை கடற்கரையில்
இறங்கினர். அவர்களில், ரூபசாந்தன், 30, என்பவரை, கடலோர காவல் படையினர் பிடித்து,
போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம், போலீசார் நடத்திய விசாரணையில், தன்னுடன்
மேலும், மூன்று பேர் வந்தது உட்பட, பல தகவல்களை தெரிவித்துள்ளார்.
அத்துடன்,
ரூபசாந்தன், தனுஷ்கோடி அரிச்சல்முனையில் இறங்குவதற்கு, அரை மணி நேரம் முன், தன்
மொபைல்போனில் இருந்து, ராமேஸ்வரத்தை சேர்ந்த ஒருவருடன் பேசியுள்ளார். அந்த நபரும்,
நான்கு பேருக்கும் உதவ முயன்றது, விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதனால்,
ரூபசாந்தனுடன் வந்த மற்ற மூன்று பேரையும் பிடிக்க, தனுஷ்கோடி பகுதியில், நேற்று
முன்தினம் இரவு முழுவதும், போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். மீனவர்கள்
சிலரிடமும் விசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment