Sunday, December 1, 2013

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதி கலாநிதி சலோகா பெயானி நாளை திங்கட்கிழமை இலங்கை வருகை!

Sunday, December 01, 2013
இலங்கை:: ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதி கலாநிதி சலோகா பெயானி நாளை திங்கட்கிழமை 02.11.13) இலங்கை வருகை. அவர் மறுநாள் செவ்வாய்க்கிழமை  யாழ்.மாவட்டத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்.

நாளை திங்கட்கிழமை இலங்கை செல்லும் ஐ.நா அதிகாரி பெயானி, மறுநாள் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளார்.  

வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், யாழ்.மாவட்ட அரச அதிபர், யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி ஆகியோரை அவர் சந்திப்பதுடன், வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள கோணப்புலம் நலன்புரி நிலையத்துக்கும் செல்வார்.

இதன் பின்னர் எதிர்வரும் புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்துக்குச் செல்லும் அவர், அங்கு அரச அதிபரையும், இராணுவத் தளபதியையும் சந்தித்துக் கலந்துரையாடுவார்.

கொழும்பில் இலங்கை அரசின் முக்கிய அமைச்சர்களையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சின் செயலர் கருணாதிலக அமுனுகம தெரிவித்தார்.

இவரது இலங்கைப் பயணம் தொடர்பான அறிக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைக் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment