Thursday, December 19, 2013
இலங்கை::வடக்கு மாகாண சபையின் எதிர்கால செயற்றிட்டங்கள்
தொடர்பாக கலந்துரையாடுவதற்கான
ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, விக்னேஸ்வரனுக்கு நேற்று முன்தினம் கடிதம்
ஒன்றினை அனுப்பிவைத்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு
வடக்கு மாகாண சபையின் அதிகாரிகள் பல்வேறு தடைகளைப்
பிரயோகிப்பதாகவும் வடமாகாண ஆளுநரை மாற்ற வேண்டும் எனவும்
முதலமைச்சர் தெரிவித்துள்ள நிலையில் ஆளுநர் இக்கடிதத்தினை
அனுப்பிவைத்துள்ளார்.
ஆளுநரின் அக்கடிதத்தில், வடக்கு மாகாண சபையின் 2014ஆம் ஆண்டுக்கான
செயற்பாடுகள் தற்போதை நிர்வாகச் சிக்கல்கள் தொடர்பாக
கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளை விரைவாக மேற்கொள்ளுமாறு
தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment