Thursday, December 19, 2013

மன்னார் வாஸ்நகர் பகுதியில் கஞ்சாவுடன் 19 வயது இளைஞன் கைது: மன்னாரில் 35 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!

Thursday, December 19, 2013
இலங்கை::மன்னார்  வாஸ்நகர் பகுதியில் கஞ்சாவுடன் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று  இரவு 11.10 அளவில் கைது செய்யப்பட்டதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

இவரிடம் இருந்து ஒரு கிலோ 140 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார். 

மன்னாரில் 35 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!

 
மன்னார் கொண்டச்சி கடற்கரை பகுதியில் சுமார் 35 கிலோகிராம் கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மன்னார் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
 
கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சா தொகையின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில் மன்னார் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அண்மைகாலமாக மன்னார் ஊடாக போதைப்பொருள் கடத்தல்கள் அதிகளவில் இம்பெற்று வருகின்றமையும் இதனை கட்டுப்படுத்த மன்னார் பகுதியில்  சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment