Tuesday, December 31, 2013

மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண ஜெ., - பிரதமர் விரைவில் ஆலோசனை!

Tuesday, December 31, 2013
சென்னை::இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள், தொடர்ந்து கைது செய்யப்படும் பிரச்னைக்கு, தீர்வு காண்பது குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர், மன்மோகன் சிங் ஆலோசனை நடத்த உள்ளதாக, டில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
தமிழக மீனவ சங்க பிரதிநிதிகள், டில்லியில், பிரதமர், மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்து, மனு அளித்தனர். பிரதமர் இல்லம் கடலூர் லோக்சபா தொகுதி, காங்கிரஸ், எம்.பி., - கே.எஸ்.அழகிரி தலைமையில், மீனவர்கள், நேற்று காலை, 11:00 மணிக்கு, பிரதமர் இல்லத்தில், அவரை

சந்தித்தனர்.நிருபர்களிடம், கே.எஸ்.அழகிரி கூறியதாவது: மீனவர்கள் பிரச்னையில், அ.தி.மு.க., அரசு, நிஜமான அக்கறை காட்டாமல், அரசியல் ஆக்குவதிலேயே முனைப்பாக உள்ளது. இவ்விஷயத்தில்,
 
ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை, காங்கிரஸ் மட்டுமே கடை பிடிக்கிறது.இருப்பினும், இந்த பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காணப்படுவது அவசியம். இதை தான், தமிழக காங்கிரஸ் சார்பில், மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தியுள்ளோம்.வெளியுறவுத் துறை மாதத்தில், 15 நாட்கள் தமிழக மீனவர்களும், மீதி, 15 நாட்கள், இலங்கை மீனவர்களும், மீன் பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக இருநாட்டு மீனவர் சங்க பிரதிநிதிகளும் சந்தித்துப் பேச, வெளியுறவுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து, தமிழக முதல்வர், ஜெயலலிதாவுடன், தான் ஆலோசிக்க இருப்பதாக, பிரதமர் மன்மோகன் சிங், உறுதியளித்தார்.இவ்வாறு, கே.எஸ்.அழகிரி, கூறினார்.

No comments:

Post a Comment