Sunday, December 1, 2013

இந்திய கடற்படைத் தளபதி ஜனாதிபதியுடன் சந்திப்பு!

Sunday, December 01, 2013
இலங்கை::இந்திய கடற்படைத்தளபதி அட்மிரல் தேவேந்திர குமார் ஜோசி நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்தரையாடினார்.

கடற்படை தொழில்நுட்பங்கள் தொடர்பான நான்கு ஆண்டு பட்டப்படிப்பு மற்றும் பயிற்சியை இலங்கை கடற்படையினருக்கு அளிக்க இந்தியா முன்வந்துள்ளது.

காலியில் நடைபெற்ற சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய கடற்படை தளபதி டி.கே.ஜோஷி இலங்கை வருகைதந்துள்ளார்.

அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெள்ளிக்கிழமை சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தினார்;. இதன்போதே இலங்கை கடற்படையினருக்கு பயிற்சியளிக்க இந்திய கடற்படை தளபதி டி.கே.ஜோஷி விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வரும் கடல்சார் பிரச்சினைகள் குறித்தும் இருவரும் விவாதித்தனர்.

இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு 4 ஆண்டுகால 'இளநிலை தொழில்நுட்ப கல்வி' குறித்த பயிற்சி அளிப்பதற்கு இந்திய கடற்படை தயாராக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கடற்படை தளபதி டி.கே.ஜோஷி கூறினார்.

கடற்படை தொழில்நுட்பங்கள் தொடர்பான நான்கு ஆண்டு பட்டப்படிப்பு மற்றும் பயிற்சியை இலங்கை கடற்படையினருக்கு அளிக்க இந்தியா முன்வந்துள்ளது. இந்தப் பயிற்சியைப் பெற உலக அளவில் பெரும் போட்டி நிலவுகிறது. இதில், இலங்கைக் கடற்படையினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்தப் பயிற்சி தற்போது இந்திய வீரர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், இந்தியக் கடல் பகுதியின் பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த பேச்சுவார்த்தையின்போது ஆலோசிக்கப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment