Wednesday, December 18, 2013
இலங்கை::புத்தளம் பிரதேசத்தின் கல்லடி 6 ஆம் கட்டை பிரதேசத்தில் பெரிய காட்டு யானை ஒன்றினை நேற்று வனவிலங்கு அதிகாரிகள் பாரிய முயற்சியின் பின்னர் பிடித்துக் கட்டினர்.
கல்லடி, கொட்டுக்கச்சி, பளுகஸ்வெவ, தங்கஸ்வெவ, கட்டுவ உள்ளிட்ட அப்பிரதேசத்தைச் சேர்ந்த பல பிரதேசதங்களிலும் கடந்த மூன்று மாத காலமாக இந்த யானையுடன் சுமார் பத்து யானைகள் கூட்டம் அட்டகாசங்கள் புரிந்து வந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இந்த பிரதேசங்களில் இந்த யானைகள் சுமார் 600 தென்னை மரங்களுடன் இப்பிரதேசங்களில் உள்ள சகல மாமரங்களையும் உடைந்த நாசமாக்கியுள்ளதாகவும் அம்மக்கள் மேலும் தெரிவித்தனர்.
இதனையடுத்து வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக இந்த யானைக் கூட்டத்தில் இருந்த பெரிய யானை இன்று பிடிபட்டது. மயக்க மருந்தினைச் செலுத்தியே இந்த யானையினை அதிகாரிகள் பிடித்தனர்.

No comments:
Post a Comment