Tuesday, December 17, 2013
இலங்கையைச் சேர்ந்தவர் இம்தியாஸ் முகம்மது, 50; இவரது நண்பர் செல்வகுமார், 52. போதைப் பொருட்கள் கடத்தலில் தொடர்புடைய இவர்கள் இருவரும், இலங்கைக்கு கடத்துவதற்காக, ஹெராயின் போதைப் பொருளுடன், திருச்சியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்தனர். மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், திடீரென, அவர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்டனர். அப்போது, இலங்கைக்கு கடத்துவதற்காக, 5.5 கிலோ ஹெராயின் போதைப் பொருள் அடங்கிய பண்டல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இவற்றின் சர்வதேச மதிப்பு, 5.5 கோடி ரூபாய்.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ஹெராயின் கடத்த முயன்ற இம்தியாஸ் முகம்மது மற்றும் செல்வகுமாரை கைது செய்தனர். 2005 ஜனவரி, 6ம் தேதி நடந்த, இந்த சம்பவம் குறித்த வழக்கு, புதுக்கோட்டை போதைப் பொருட்கள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, இலங்கைக்கு போதைப் பொருள் கடத்த முயன்ற இம்பதியாஸ் முகம்மது மற்றும் செல்வகுமாருக்கு தலா, 10 ஆண்டு சிறைத் தண்டனையும், 4 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும், மூன்று ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் உத்தரவிட்டார்.
திருச்சி::திருச்சியிலிருந்து இலங்கைக்கு, 5.50 கோடி ரூபாய் மதிப்புள்ள, ஹெராயின் போதைப்
பொருள் கடத்த முயன்ற வழக்கில், இலங்கையைச் சேர்ந்த இருவருக்கு, தலா, 10 ஆண்டு
சிறைத் தண்டனையும், 4 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, புதுக்கோட்டை சிறப்பு
நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலங்கையைச் சேர்ந்தவர் இம்தியாஸ் முகம்மது, 50; இவரது நண்பர் செல்வகுமார், 52. போதைப் பொருட்கள் கடத்தலில் தொடர்புடைய இவர்கள் இருவரும், இலங்கைக்கு கடத்துவதற்காக, ஹெராயின் போதைப் பொருளுடன், திருச்சியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்தனர். மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், திடீரென, அவர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்டனர். அப்போது, இலங்கைக்கு கடத்துவதற்காக, 5.5 கிலோ ஹெராயின் போதைப் பொருள் அடங்கிய பண்டல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இவற்றின் சர்வதேச மதிப்பு, 5.5 கோடி ரூபாய்.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ஹெராயின் கடத்த முயன்ற இம்தியாஸ் முகம்மது மற்றும் செல்வகுமாரை கைது செய்தனர். 2005 ஜனவரி, 6ம் தேதி நடந்த, இந்த சம்பவம் குறித்த வழக்கு, புதுக்கோட்டை போதைப் பொருட்கள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, இலங்கைக்கு போதைப் பொருள் கடத்த முயன்ற இம்பதியாஸ் முகம்மது மற்றும் செல்வகுமாருக்கு தலா, 10 ஆண்டு சிறைத் தண்டனையும், 4 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும், மூன்று ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment