Friday, November 29, 2013

தொன்மையான புத்தர் கோவில் நேபாளத்தில் கண்டுபிடிப்பு!!Oldest Buddhist Shrine Uncovered In Nepal May Push Back the Buddha's Birth Date!!

Friday, November 29, 2013
காத்மாண்டு::நேபாளத்தில், லும்பினி பகுதியில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொன்மையான கோவிலின் மூலம், புத்த மதத்தைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
நேபாளத்தில் உள்ள, லும்பினி என்ற இடத்தில் தான் புத்தர் பிறந்தார் என்றும், புத்தரின் தாயார் மாயாதேவி, பிரசவிக்கும்போது, தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளையை இறுகப் பற்றியிருந்தார் என்றும் கூறப்படுகிறது. புத்தரின் பிறப்பிடமாக, மன்னர் அசோகர் காலத்திலிருந்தே லும்பினி கருதப்படுகிறது. புத்த துறவிகள், லும்பினி செல்வதை தங்கள் வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ளனர்.
 
புத்தர், கி.மு., 390 340ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தார் என்றும், அவர் கி.மு., 623ம் ஆண்டு பிறந்தார் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவி வந்தன. இதற்கிடையே, லும்பினியில் உள்ள மாயாதேவி கோவிலுக்குள் புதைந்து கிடந்த, ஒரு பகுதியை, தொல்லியல் துறையினர் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். இந்த கோவிலின் மத்தியில், ஒரு மரம் இருந்ததற்கான ஆதாரமும் கிடைத்துள்ளது.
இந்த கட்டடம் செங்கற்களால் கட்டப்பட்டு, பின், மரத்தால் வேயப்பட்டிருந்தது. இதன் மேற்கூரை இல்லை. இந்தக் கட்டடத்தின் வயதைக் கணக்கிடுவதற்காக, அங்கு கிடைத்த மரக்கரி, மணல் துகள்கள் ஆகியவை, நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் ஆய்வு செய்யப்பட்டது. இதில் அந்தக் கட்டடம், கி.மு., 6ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என, உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இந்த கட்டடத்தின் மையத்தில் மரம் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. அந்த மரத்தின் கிளையை பற்றியபடி தான் மாயாதேவி புத்தரை பிரசவித்திருக்கலாம் என்ற முடிவுக்கு, ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர். இது குறி"த்து, சர்வதேச தொல்லியல் ஆய்வாளர்கள் ராபின் கானிங்ஹாம், கோஷ் பிரசாத் ஆச்சாரியா ஆகியோர் குறிப்பிடுகையில், "இந்த கண்டுபிடிப்பு மிக முக்கியமானது; இதன் மூலம், புத்த மதத்தைப் பற்றிய மேலும் அறிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது' என்றனர்.
 
Oldest Buddhist Shrine Uncovered In Nepal May Push Back the Buddha's Birth Date!!
 
Time to push back the Buddha's birth date a century or so? Archaeologists may have uncovered evidence of the oldest Buddhist shrine yet discovered, dating to around 550 B.C.

Located at Nepal's Lumbini pilgrimage center, the legendary site of the Buddha's birth, the discovery points to the renowned religious figure living more than a century earlier than dates accepted by many scholars. (See also: "Buddha Rising.")

"What we have got is the earliest Buddhist shrine in the world," says archaeologist Robin Coningham of the United Kingdom's Durham University, lead author of the discovery study, released on Monday by the journal Antiquity.

In the study, the international archaeology team reports digging beneath existing brick structures at the shrine, which is visited yearly by hundreds of thousands of pilgrims.

No comments:

Post a Comment