Wednesday, November 20, 2013
இலங்கை::கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தியாளர்களின் கால் நடைக்கான மேய்ச்சல் தரை மற்றும் சுவீகரிக்கப்பட்டு வரும் காணிகளை நேற்றைய தினம் 19.11.2013 செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது.
இம்மாநாட்டில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட், பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது அம்பாறை மாவட்டத்தில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள பட்டிமேடு மேய்ச்சல் நிலம், விவசாயக் காணிகள், பொத்துவில் கரஞ்சோலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மங்களகம, ஏறாவூர் பற்று, வவுணதீவு, அம்பாறை – மட்டக்களப்பு எல்லைப் பிரதேசங்கள், திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை, குச்சவெளி போன்ற பிரதேசங்களின் காணப்பட்டு வரும் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
மூன்று மாவட்டங்கிளினதும் பிரதேச மற்றும் மாவட்ட மட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் காணி பிரச்சினைகள் தொடர்பில் அனைத்து தரப்பினரையும் அழைத்து பொது இணக்கப்பாடடின் மூலமாக ஒரு தீர்வுக்கு வருமாறு இதன்போது அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த ஆலோசனை வழங்கினார்.
இவ் அமர்வில் சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் ,நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், உள்ளு10ராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், ‘லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், கிழக்கு மாகாண தவிசாளர், அமைச்சர்கள், உறுப்பினர்கள், மூன்று மாவட்டத்தின் அரசாங்க அதிபர்கள், அமைச்சு அதிகாரிகள், இராணுவ அதிகாரிகளும் அத்துடன் பாதிக்கப்பட்ட பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் 30 வருட கால யுத்தத்தின் காரணமாக நாட்டில் ஏற்பட்ட இடர்பாடுகளினால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாத ஒரு சூழ்நிலைக்குள்ளாகினோம். இருந்தபோதிலும் பல தீர்வுகளை கண்டு வருகிறோம். தற்போது யுத்த நிலைக்கு தீர்வு காணப்பட்டு நாட்டில் சமாதான சூழ்நிலை ஏற்பட்டு ஐந்து வருடங்களாகிய நிலையில் நாங்கள் இனி வரும் காலங்களில் தொடர்ந்தும் இதற்கான தீர்வினை மிக விரைவில் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்..
இதன்போது அம்பாறை மாவட்டத்தில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள பட்டிமேடு மேய்ச்சல் நிலம், விவசாயக் காணிகள், பொத்துவில் கரஞ்சோலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மங்களகம, ஏறாவூர் பற்று, வவுணதீவு, அம்பாறை – மட்டக்களப்பு எல்லைப் பிரதேசங்கள், திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை, குச்சவெளி போன்ற பிரதேசங்களின் காணப்பட்டு வரும் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
மூன்று மாவட்டங்கிளினதும் பிரதேச மற்றும் மாவட்ட மட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் காணி பிரச்சினைகள் தொடர்பில் அனைத்து தரப்பினரையும் அழைத்து பொது இணக்கப்பாடடின் மூலமாக ஒரு தீர்வுக்கு வருமாறு இதன்போது அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த ஆலோசனை வழங்கினார்.

No comments:
Post a Comment