Sunday, November 03, 2013
சென்னை::புலிகளிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு செயற்படுவர்களின் பேச்சுக்களை புறக்கணித்து விட்டு இந்தியா பொதுநலவாய நாடுகளின் கொழும்பு மாநாட்டில் பங்கேற்கவேண்டும் என்று இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கோரியுள்ளார்.
புலிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு போராட்டம் செய்வோரே இலங்கை மாநாட்டுக்கு இந்தியா செல்லக்கூடாது என்று ஜோசிபதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தியாவின் அரசியல் அமைப்பின்படி வெளிநாட்டுக் கொள்கை என்பது மத்திய அரசாங்கத்தினதும் நாடாளுமன்றத்தினதும் கொள்கைப்படியே செயற்படுத்தப்படுகிறது.
எனவே இங்கு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று தீர்மானம் ஏற்புடையதாக இருக்காது என்று சுப்பிரமணியன் சுவாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக அரசாங்கமும் வெறுமனே சிறிய குற்றச்சாட்டுக்களை முன்னிலைப்படுத்தாமல் இலங்கையுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று, இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆலோசனை வழங்கியுள்ளார்.


No comments:
Post a Comment