Monday, November 18, 2013

திருகோணமலையில் உள்ள சீனன்குடா மீன்பிடி அபிவிருத்திப் பணி


Monday, November 18, 2013
இலங்கை::திருகோணமலையில் உள்ள சீனன்குடா மீன்பிடி நிலையத்திற்கு  (16.11.2013) சென்ற கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி மீன்பிடி கைத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான  ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு மீனவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
 
இதன் போது அமைச்சருடன் சவூதி அரேபியாவின் முன்னாள் பிரதி விவசாய அமைச்சரும சவுதி அரேபியாவின் மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான பொறியியலாளர் முஹமட் அல் ஜாபர் ஸஹலி அவர்களும் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பதி அமைச்சின் செயலாளர்  கிழக்கு மாகாண மீன்பிடிப் பணிப்பாளர்  உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டு அங்கு கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டனர். 
 
இந்தக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த சவூதி அரேபியாவின் முன்னாள் பிரதி விவசாய அமைச்சரும் சவுதி அரேபியாவின் மீன்பிடி கூட்டுத்தாபனத்தின நிறைவேற்று பணிப்பாளருமான பொறியியலாளர் முஹமட் அல் ஜாபர் சஹலி அவர்கள் புதிய தொழில்நுட்ப வசதிகளையும் மீன்பிடி ஏற்றுமதிக்கான சந்தை வாய்ப்புக்களையும் குறிப்பாக சவூதி அரேபியாவிற்கு அதிகமான மீன்களை ஏற்றுமதி செய்வதற்குரிய சகல வசதிகளையும் ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார். 
 
இதனைத் தொடர்ந்து அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது இரு நாடுகளுக்குமுள்ள வர்த்தக உறவினை பலப்படுத்துவதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் பங்காற்றுவதன் மூலம் மீனவர்களின் வறுமை நிலையினை குறைக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

No comments:

Post a Comment