Friday, November 29, 2013

இலங்கை குறித்து வெளிநாடுகளில் அவதூறு: யாருக்கும் அஞ்சப்போவதில்லை- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Friday, November 29, 2013
இலங்கை::இலங்கை குறித்து வெளிநாடுகளில் அவதூறு பரப்பி விடப்படுகிறது. எதற்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம். தொடர்ந்து இலங்கை நலப்பணியில் பயணிப்போம் என்று இலங்கை அதிபர்  மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். பேய்களுக்கு அச்சமென்றால் சுடுகாட்டில் வீடு கட்டியிருக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை : வெளிநாடுகளுக்கு சென்று அரசாங்கத்திற்க எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. எந்த தரப்பிற்கும் அஞ்சப் போவதில்லை. பேய்களுக்கு பயந்தால் சுடுகாட்டில் வீடு அமைக்க முடியாது என பழமொழியொன்று உண்டு.

தாய் நாட்டுக்கு ஆற்ற வேண்டிய சேவையை நாங்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளோம். எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் எமது பயணத்தை கைவிட மாட்டோம். நாட்டின் ஜனநாயகத்தின் மீது எமக்கு நம்பிக்கை உண்டு. மக்களின் நம்பிக்கையை ஒரு போதும் சீர்குலைக்க மாட்டோம் . இவ்வாறு அவர் பேசினார்.
அவர் மேலும் பேசுகையில் ; சர்வதேச சக்திகளைக் கொண்டு இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்த சில தரப்பினர் முயற்சி மேற்கொள்கின்றனர்.
 
கடன் பெற்றுக்கொள்வதாக குற்றம் சுமத்துகின்றனர். நாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே கடன் பெற்றுக்கொள்கின்றோம். அரசை கவிழ்க்க முயற்சிக்கப்படுகிறது. என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
 

No comments:

Post a Comment