Friday, November 22, 2013

யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராக வட மாகாண முதலமைச்சர்!

Friday, November 22, 2013
இலங்கை::யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராக வட மாகாண முதலமைச்சர்
சி.வி. விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளதாக பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் கே . என் . டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் .
 
இந்த நியமனம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார் .
 
இது தொடர்பான கடிதமொன்று ஜனாதிபதி செயலகத்தினால் வட மாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் ; தெரிவித்தார் . குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,
 
" நாடு பூராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மகிந்த சிந்தனையின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்தல் , அந்த அபிவிருத்தி தொடர்பான ஆய்வுகள் செய்தல் , திட்டங்களை முன்னெடுத்தல் போன்ற பல்வேறு விடயங்களை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா  ஒருவருடன் இணைந்து முன்னெடுப்பதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் .
 
இந்த ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைமைப்பதவி 2013 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரை நடைமுறையிலிருக்கும் " .

No comments:

Post a Comment