Friday, November 22, 2013
இலங்கை::டுபாயிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் சுமார் 4 கோடி பெறுமதியான சிகரட்டுக்களை ஒருகொடவத்த சுங்க பரிசோதனை மத்திய நிலைய அதிகாரிகள கைப்பற்றியுள்ளனர். சுங்க விஷேட வருமானத் துறை அதிகாரிகளாலேயே இந்த சிக்கரட்டுக்கள் இன்று கைப்பற்றப்பட்டன.
டுபாயிலிருந்து பாவனைப் பொருட்கள் என்ற பெயரில் அனுப்பப்பட்டிருந்த கொள்கலன் ஒன்றிலிருந்தே இந்த சட்டவிரோத சிகரட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 150 இலட்சம் சிகரட்டுக்கள் இவ்வாறு சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டதாக சுங்க திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்டிகளில் அடைக்கப்பட்ட நிலையில் இந்த சிகரட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவை சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. சிகரட்டுக்கள் பெட்டிகளை பெரிய பெட்டியொன்றில் மறைத்து அதில் பாதணிகள் போன்ற பாவணைப் பொருட்களை மேலால் வைத்திருந்தனர்.
இன்னிலையிலேயே சுங்க விஷேட வருமானத் துறை அதிகாரிகளால் இவை மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட சட்டவிரோத வெளி நாட்டு சிகரட்டுக்களின் பெறுமதியானது 4.3 ரூபா கோடி பெறுமதியானது என மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சுங்க திணைக்களத்தின் விஷேட விசரணைப் பிரிவினர் விசாறனைகளை முன்னெடுக்கின்றனர்.

No comments:
Post a Comment