Thursday, November 28, 2013
இலங்கை::தேசிய மாணவர் படையணியின் அதிகாரிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்குடன் சேர்த்துக் கொள்ளப்பட்ட 32 ஆவது உள்வாங்கள் ஆசிரியர்களுக்கு அதிகாரிகளாக அதிகாரமளிக்கும் நிகழ்வு மாணவர் படையணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் எச்.எம்.எச்.ஏ ஹேரத் அவர்களின் முன்னிலையில் அண்மையில் இடம்பெற்றது.
மாணவர்களை ஒழுக்க சீடர்களாகவும் தலைமைத்துவ ஆற்றள் கொண்டவர்களாகவும் உருவாக்கும் நோக்குடன் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் உருவாக்கப்பட்ட தேசிய மாணவர் படையணியின் கனிஷ்ட தலைமைத்துவ பயிற்சியை முடித்துக் கொண்ட மாணவர்களின் வெளியேரல் அணிவகுப்பு மற்றும் ஆங்கிலப் பயிற்சி, கணனிப் பயிற்சி நெறிகளில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதது.






No comments:
Post a Comment