Saturday, November 23, 2013

வடக்கில் புலிகளின் சிலைகளை அமைக்க இடமளிக்கப்பட மாட்டாது!


Saturday, November 23, 2013
இலங்கை::வடக்கில்  புலிகளின் சிலைகளை அமைக்க இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்பு தரப்பு அறிவித்
துள்ளது.
 
புலிகளின் தலைவர்  பிரபாகரனின் உறவினரான சதாசிவம் கிருஸ்ணகுமார் உள்ளிட்ட மூன்று புலிச் செயற்பாட்டாளர்களின் உருவச் சிலைகளை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
 
வல்வெட்டித்துறை பிரதேசத்தில் இந்த உருவச் சிலைகள் அமைக்கப்பட உள்ளன.
 
புலிகளின் உருவச் சிலைகளை அமைப்பதற்கு வல்வெட்டித்துறை நகரசபை பூங்கா ஒன்றை கைப்பற்றியுள்ளதாக  ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
 
பிரபாகரனின் பிறந்த நாளான்று உருவச் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் நடைபெறவுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
 
ஏற்கனவே வல்வெட்டித்துறையில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின்
மாவீர்ர் துயிலும் இல்லங்கள் இடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment