Wednesday, November 27, 2013
இலங்கை::புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் (தெருநாய்) ஸ்ரீதரன், பாராளுமன்றில் புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரபாகரனின் பிறந்த நாள் இன்றைய தினம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புலிகளின் மாவீரர் தினத்தில் பிரபாகரன் மற்றும் உயிரிழந்த ஏனைய புலிகளின் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரபாகரனின் போராட்டமானது நியாயமானது எனவும், அதில் தவறில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளின் போராட்டம் ஒர் சுதந்திரப் போராட்டமாக கருதப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் உரைக்கு ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
பிரபாகரன் தமிழ் சிங்கத் தலைவர்களை கொலை செய்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஸ்ரீதரனின் உரைக்கு, அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
பிரபாகரன் தொடர்பில் ஸ்ரீதரன் ஆற்றிய உரையின் சர்ச்சைக்குரிய பகுதிகளை ஹன்சார்டிலிருந்து நீக்கிவிடுமாறு பிரதி சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.


No comments:
Post a Comment