Monday, November 18, 2013
சென்னை::இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை விசாரிக்க, இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்Õ என்று திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த டெசோ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ் ஈழம் ஆதரவாளர்கள் அமைப்பின் (டெசோ) கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. டெசோ இயக்க தலைவரும், திமுக தலைவருமான (கரடி புலி) கருணாநிதி தலைமை தாங்கினார். டெசோ அமைப் பின் உறுப்பினர்கள் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சுப. வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணை பொது செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர். பாலு, அமைப்புச் செயலா ளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., ரவிக்குமார், வழக்கறிஞர்கள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அசன் முகமது ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
* காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்று டெசோ அமைப்பு மற்றும் அனைத்து கட்சியினரும், மத்திய அரசை பல முறை வலியுறுத்திய பின்னரும், ஒரு துரும்பு கூட இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் செல்லக்கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறிய பின்னும்; தமிழர் உணர்வுகளைப் புறக்கணித்து விட்டு, வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையில் ஒரு குழு இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல ஆகி விட்டது.கனடா நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், மொரீசிய நாட்டின் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம், ட்ரினிடாட் நாட்டின் பிரதமர் கம்லா பெர் சாத் பிசேசார் ஆகியோர் அந்த மாநாட்டில் பங்கேற்பதில்லை என்று முடிவெடுத்து புறக்கணித்து விட்டனர். இலங்கையில் சம்பந் தம் தலைமையில் இயங்கும் தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் அந்த மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று தீர்மானமே நிறைவேற்றியுள்ளனர்.
மாநாட்டில் கலந்து கொண்ட, இங்கிலாந்து நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன், ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளை நேரில் சுற்றிப் பார்த்து அங்குள்ள தமிழ் மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு, இலங்கை அரசு வருகிற மார்ச் மாதத்திற்குள், தங்களுடைய விசாரணையை முடிக்கவில்லை என்றால், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தின் மூலமாக நடவடிக்கை மேற்கொள்வோம் என்று தெரிவித்திருப்பது பாராட்டுக்குரியது மாத்திரமல்லாமல்; நமக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கிறது. கேமரூன் வெளியிட்டிருக்கும் இதே கருத்தைத் தான் 16.3.2013 அன்று, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை அந்த மாநாட்டில் கலந்து கொள்ளச் செய்ததை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. சிங்களவர்களும் இலங்கை கடலோரக் காவல் படையினரும் இணைந்து கட்டவிழ்த்து விடும் கொடுமைகளினால், இதுவரை 880 மீனவர்கள் பலியாகியிருக்கிறார்கள்.
* பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கருத்துகளை யும், உலகத் தமிழர்களின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு, இனியாவது மத்திய அரசு, இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
* இலங்கையில் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் உள்ள அமைச்சரவையின் பரிந்துரைகளை ஏற்பது அல்லது நிராகரிப்பதற்கான அதிகாரம் மாகாண ஆளுநருக்கும் ராஜபக்சேக்கும் தான் உள்ளது. இந்த இறுக்கமான நிலையில் அங்குள்ள தமிழர்களுடைய எதிர்பார்ப் புக்கு ஏற்றவாறு அரசு நலத்திட்டங்களை எப்படி நடைமுறைப்படுத்தமுடி யும்? வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுவதும் நீர்த்துப் போன அரசியல் அதிகாரப் பங்கீடுகளே அனுமதிக்கப்பட்டுள் ளன. அங்குள்ள தமிழர்களின் விருப்பத்திற்கேற்றவாறு அரசியல் தீர்வு அமைய, வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்பதும்; தமிழினப் படுகொலை, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மீது நம்பகமானதும், சுதந்திரமானதுமான சர்வதேச விசாரணை வேண்டும் என்பதும் தான் டெசோ அமைப்பின் நிலைப்பாடாக இருந்தா லும்; இடைக்கால நிவாரணமாக முழுமையான அதிகாரங்கள் தமிழர்களுக்குக் கிடைத்திடும் வகையில், 13வது சட்டத் திருத்தம் அமையவேண்டும். இதற்கு இந்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்தி தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றிட முன்வர வேண்டும்.
* 2009ம் ஆண்டிலிருந்தே 577 கோடி அளவுக்கான திட்டங்களை மானிய உதவியாக இந்தியா வழங்கியது. மேலும் அடுத்த 3 ஆண்டுகளில் கூடுதலாக 1,300 கோடி அளவிற்கு செலவழிக்கவும் உறுதி அளிக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் வடக்கு ரயில்வே திட்டத்தினை நிறைவேற்ற 4,000 கோடியை கடனுதவியாக வழங்கவும் இந்தியா ஒப்புக் கொண்டதோடு, அத்தொகையில் இலங்கை அரசினால் இதுவரை 1,685 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.ஆனால் இலங்கை அரசு, இலங்கையின் தென்கோடியில் உள்ள சிங்களவர்கள் வாழும் காலி நகரத் தில் புகைவண்டி நிலையம் கட்டுவதற்கு, இந்திய அரசு வழங்கிய நிதியைப் பயன்படுத்தி உள்ளது. அது போலவே சிங்களவர்கள் வாழும், சீனாவின் பிடியில் உள்ள ஹம்பன் தோட்டா நகரத்தில் உள்ள மருத்துவமனைக்கு இந்தியா தமிழர் பகுதிகளுக்காக வழங்கிய அதிநவீன கருவிகளை இலங்கை அரசு பயன்படுத்தி உள்ளது. இதையும் இந்திய அரசு கண்டு கொள்ளாமல் பாராமுகமாகவே இருக்கின்றது. இப்பிரச்னை குறித்து இந்திய அரசு தீவிரமாக ஆய்வு செய்து, அவற் றின் முழுப்பயனும் ஈழத் தமிழர்களுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தஞ்சை விளார் பகுதியில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத் தின் சுற்றுச் சுவரையும் பூங்காவையும் அழித்துள்ளது அதிமுக அரசு. அதிமுக அரசு எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச் சுவரை இடித்துத் தகர்த்து, பூங்காவையும் அழித்திருக்கிறது. ஈழத் தமிழர் துயரத்தின் நினைவுச் சின்னமான முள்ளிவாய்க் கால் முற்றத்தை சிதைத்ததன் மூலம் ஜெயலலிதாவின் வழக்கமான கபட நாடகம் மீண்டும் ஒரு முறை அம்பலமாகியிருக்கிறது. அதிமுக அரசின் இந்தத் தமிழின விரோத நடவடிக்கையை இக்கூட் டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

No comments:
Post a Comment