Friday, November 29, 2013

மனிதப் படுகொலை புரிந்த புலிகளை சுதந்திர வீரர்களாக சித்தரிப்பது தவறு: சர்வ மதத் தலைவர்கள்!

Friday, November 29, 2013
இலங்கை::மனித உரிமை என்ற போர்வையில் நாட்டில் நிலவும் சமாதானத்தை சீர்குலைப்பதற்கு தேசிய சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என சர்வ மதத் தலைவர்கள் தெரிவித்தனர்.

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் இலங்கைக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்களை முற்றாக நிராகரித்த சர்வ மதத் தலைவர்கள் மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்கும் வகையில் செயற்படுவோரிடமி ருந்து நாட்டைப் பாது காப்பதற்கு இலங்கையர் என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் தேவையாகும் என தெரிவித்தனர்.

இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தி குழப்பகரமான சூழலை வாய்ப்பாக்கிக் கொள்வதற்கு எத்தனிக்கும் சூழ்ச்சிக்காரர்களிட மிருந்து அரசாங்கமும் நாட்டு மக்களும் மிக அவதானமாக செயற்பட வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.

நாட்டுக்கு எதிராக தேசிய சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் சர்வமதத் தலைவர்கள் அமைப்பு நேற்று கொழும்பில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தியது. கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் போதே சர்வ மதத் தலைவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

நாட்டின் அரசியல் தலைவர்களையும் பொது மக்களையும் படுகெலை செய்த புலிகளுக்கு மாவீரர் தினம் கொண்டாட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலி ஆதரவாளர்கள் முயற்சிப் பதாகவும் இத்தகைய குற்றவாளிகளை கெளரவிப்பதற்கு இந்த நாட்டில் இடமளிக்கக் கூடாது என அவர்கள் தெரிவித்தனர். அரசாங்கம் இது விடயத்தில் கவனம் செலுத்துவது அவசியம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

கம்புறுகமுவே வஜிர தேரர் இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் :-

ஐக்கிய தேசியக் கட்சி தேசத் துரோகியாகச் செயற்படுகிறது. டி. எஸ். சேனநாயக்கா போன்ற சிறந்த தலைவர்கள் இருந்த கட்சி இன்று மிக மோசமாகச் செயற்பட்டு வருகிறது.

கட்சிக்குத் தலைவர் தேர்ந்தெடுப்பதில் பயனில்லை. அவர்கள் முதலில் நாட்டுக்கு எதிராக செயற்பாடுகளை நிறுத்தட்டும்.

புலிகளின் மாவீரர் தினம் கொண்டாட ஏற்பாடுகள் நடப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலி ஆதரவாளர்கள் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது- அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

குற்றவாளிகளை நினைவு கூருவதை எவரும் ஏற்க மாட்டார்கள். இத்தகைய நிகழ்வொன்று நிகழ்வதற்கு இடமளிக்கக்கூடாது. மீண்டும் இந்த நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு மக்கள் இடமளிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

குருநாகல் மறை மாவட்ட அங்கிலிக்கன் திருச்சபை ஆயர் சாந்த பிரான்ஸிஸ் ஆண்டகை இங்கு உரையாற்றுகையில் :-

பொதுநலவாய நாடுகள் மாநாட்டுக்கு வருகை தந்துவிட்டு யாழ்ப்பாணத்திற்கு ஒரு மணித்தியாலம் மட்டுமே சென்று திரும்பிய பிரித்தானிய பிரதமர் மனித உரிமை மீறப்பட்டுள்ளது எனக் கூறுவது எப்படி? யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் குருநாகலில் அனைத்துப் பிரதேசங்களிலும் வாழ்கின்றனர். பிரித்தானிய பிரதமர் அங்கு வந்து பார்த்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

நாட்டின் தலைவர்களையும் பொதுமக்களையும் படுகொலை செய்தவர்கள் மாவீரர்களா? அவர்கள் யார்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

மனித உரிமை பிரச்சினை இல்லாத நாடுகளே உலகில் கிடையாது. அவ்வாறிருக்கையில் 30 வருட காலம் யுத்தம் நடந்த நாட்டில் மனித உரிமை பிரச்சினை இருப்பது இயல்பு. தமிழ் மக்களின் உரிமை மட்டும் பாதிக்கப்படவில்லை. அனைத்து மக்களினதும் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கெமரூன் உணர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்து மத குருக்கள் பாபு சர்மா இங்கு உரையாற்றுகையில் :-

இலங்கையில் சமாதான சூழலை ஏற்படுத்தி பொதுநலவாய மாநாட்டை நடத்தியமைக்காக டேவிட் கெமரூன் எமது ஜனாதிபதியைப் பாராட்டி இருக்க வேண்டும், அதைவிடுத்து அவர் நாட்டுக்கு எதிராகப் பேசிச் சென்றுள்ளார்.
பிஏ 9பீ பாதையில் பயணிக்க புலிகளுக்கு கட்டணம் வழங்க வேண்டிய யுகத்தை மாற்றி யாழ்ப்பாணத்துக்கு சுதந்திரமாக போய் வர கெமரூனுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமையை அவர் பாராட்டி இருக்க வேண்டும்.
பல தேர்தல்களில் தோல்வியுற்ற ஐ. தே. க. பிசனல் 4பீ ஊடகவியலாளர்களை அழைத்து அவர்களின் ஆதரவோடு தந்திரமாக அரசைக் கைப்பற்றலாம் என எண்ணி செயற்படுகின்றமை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

சுதந்திர போராட்ட வீரர்களான சேர் பொன். அருணாசலம், சேர் பொன். இராமநாதன், >சூ(> செல்வா, அமிர்தலிங்கம் போன்றோர் எக்காலத்திலும் நினைவு கூரத் தகுந்தவர்கள். எனினும் குற்றச்செயல்களையே செய்த புலிகளை மாவீரர் என நினைவு கூருவதை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் எனவும் பாபு சர்மா தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய முஸ்லிம் மதத் தலைவர் ஹசன் மெளலானா தமதுரையில் :-

எமது தாய் நாட்டின் முன்னேற்றத்தைக் கண்டு எரிச்சல் படுபவர்களே நாட்டுக்கு எதிராகச் செயற்படுகின்றனர். மூன்று தசாப்த யுத்தகாலத்தில் எந்த சர்வதேசத் தலைவரும் வடக்குக்கு விஜயம் செய்ததில்லை.

எனினும் இப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அந்த நிலையை மாற்றியுள்ளார். புலிகளை பேச்சுக்கு அழைத்த போதும் அவர்கள் படுகொலை செய்வதைக் கைவிடவில்லை. அதனால்தான் மனிதாபிமான நடவடிக்கையை ஜனாதிபதி ஆரம்பிக்க நேர்ந்தது.

யாழ்ப்பாணத்துக்குச் சென்ற டேவிட் கெமரூன் அங்கு பதாதைகளுடன் நின்ற பெண்களைப் பார்த்துவிட்டு மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகக் கூறினார். மக்கள் படுகொலைகளை நிறுத்தியது மனித உரிமை மீறலா?

கிழக்கிலும் பள்ளிவாசலில் 161 முஸ்லிம்கள் புலிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இது மனித உரிமை மீறல் இல்லையா? யாழ் சென்று வட மாகாண முதலமைச்சருடன் பேச்சு சடத்திய கெமரூம் கிழக்குக்கும் வந்து கிழக்கு முதலமைச்சருடனும் பேச்சு நடத்தியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment