Wednesday, November 13, 2013
தஞ்சை::இலங்கைப் போரில் கொல்லப்பட்ட புலிகளின் நினைவாக தஞ்சையில் கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் காம்பவுண்ட் சுவர் மற்றும் பூங்காவை போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலையில் இடித்து தள்ளினர். இதை கண்டித்து மறியல் செய்த புலி பினாமிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் ஏராளமான புலிகள் கொல்லப்பட்டனர். போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த கொடூரங்களை சித்தரிக்கும் வகையில் ஓவியங்கள் மற்றும் சிற்பங்களுடன் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்’ என்ற கலாச்சார பூங்கா, உலகத்தமிழர் பேரமைப்பு சார்பில் தஞ்சை விளார் பைபாஸ் ரோட்டில் இரண்டரை ஏக்கரில் அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழாவை கடந்த 8ம் தேதி நடத்த தஞ்சை போலீசில் அனுமதி கேட்கப்பட்டது. போலீசார் அனுமதி மறுத்ததால் உலகத்தமிழர் பேரமைப்பு, மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை திறக்கலாம் என ஐகோர்ட் கடந்த 5ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, 6ம் தேதி காலை புலிகளின் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் நெடுமாறன் அதை திறந்து வைத்தார்.
இதற்கிடையே, முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழாவுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி தஞ்சை எஸ்.பி தர்மராஜன் மதுரை ஐகோர்ட் கிளையில் கடந்த 7ம் தேதி மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு மற்றும் அதை தொடர்ந்து நடைபெறும் விழாக்களுக்கு போலீசார் அனுமதியும், உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டதுடன், போலீசாரின் மேல் முறையீடு மனுவையும் தள்ளுபடி செய்தனர்.
ஏற்கனவே திட்டமிட்டபடி 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் வைகோ, பா.ஜ. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன், சசிகலா நடராஜன் மற்றும் டைரக்டர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மாரிமுத்து தலைமையில் 100 பேர், 2 பொக்லைன், 4 ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் பல்வேறு வாகனங்களில் அங்கு வந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக எஸ்.பி. தர்மராஜ், கூடுதல் எஸ்.பி. இளம்பரிதி, டிஎஸ்பி அர்ஜுனன் மற்றும் 500 போலீசாரும் குவிக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் ஆர்டிஓ தேவதாஸ் போஸ், தாசில்தார் காமராஜ் ஆகியோரும் அங்கு வந்தனர்.
இதன்பின், பொக்லைன், ஜேசிபி இயந்திர உதவியுடன் காம்பவுண்ட் சுவர், மற்றும் பூங்காவை இடிக்கத் தொடங்கினர். இதை அறிந்த பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் அங்கு விரைந்து வந்தனர். அவர்களிடம், ‘நெடுஞ்சாலைத்துறை இடத்தில் பூங்காவும், காம்பவுண்ட் சுவரும் கட்டப்பட்டுள்ளது. அரசு இடத்தை கைப்பற்றுகிறோம்’ என அதிகாரிகள் கூறிவிட்டு இடிக்கும் பணியை தொடங்கினர்.
இந்த தகவல் பரவியதும், தஞ்சையில் இருந்து ஏராளமானோர் முள்ளிவாய்க்கால் முற்றம் பகுதிக்கு வாகனங்களில் விரைந்தனர். அரைகிலோ மீட்டர் தூரத்திலேயே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். முள்ளிவாய்க்கால் முற்றத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த 280அடி நீளம், 80அடி அகலமுள்ள காம்ப்வுண்ட் சுவரும், முற்றத்தையொட்டி அமைந்திருந்த பூங்காவும் இடிக்கப்பட்டு தரைமட்டம் ஆக்கப்பட்டது. பூங்காவில் உள்ள நீரூற்று, உயர்கோபுர விளக்குகள், நடைபாதைகள் ஆகியவை இடிக்கப்பட்டன.
இதைக் கண்டித்து, தொண்டர்கள் பலர் ஆங்காங்கே சாலை மறியல் செய்தனர். அவர்களை போலீசார் பிடித்து சென்றனர். மதிமுக மாவட்ட செயலாளர் உதயக்குமார், நகர செயலாளர் ரவிச்சந்திரன், தமிழ் தேச பொதுவுடமை கட்சி மணியரசன், ஏஐடியுசி செயலாளர் மதிவாணன், நாம் தமிழர் கட்சி இளைஞரணி செயலாளர் கரிகாலன், நல்லதுரை உள்ளிட்டோர் சாலை மறியல் செய்தனர். போலீசார் தடியடி நடத்தி 14 பேரை கைது செய்தனர். தடியடியில் கரிகாலன், செந்தில்நாதன் ஆகியோர் கைகளில் காயம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் தஞ்சையில் உள்ள மக்கள் மன்றத்தில் வைத்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் காம்பவுண்ட், பூங்கா உள்ளிட்டவை இடிக்கப்பட்டதால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கண்டனம்: உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறியதாவது:
முள்ளிவாய்க்கால் முற்றத்தை சுற்றியுள்ள சுவர், பூங்கா அரசு இடம்தான். கலெக்டர் அனுமதி பெற்றுதான் அதை கட்டியுள்ளோம். வருடத்திற்கு ஒரு முறை அந்த அனுமதியை புதுப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அந்த இடம் பெறப்பட்டது. முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கவேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம். அதற்கு மாநில அரசும் துணை போய் உள்ளது.
இதுவரை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முதல்வர் பேசியது, எழுதியது, தீர்மானம் நிறைவேற்றியது எல்லாம் நாடகம் என்பது தெரியவருகிறது. எந்த அறிவிப்பும் இல்லாமல் அதிகாலை 5 மணிக்கே இருட்டில் வந்து திருட்டுத்தனமாக இடித்ததை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வோம்.
பழ.நெடுமாறன் கைது
முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு இன்று காலை 10.20 மணிக்கு டிஐஜி அமல்ராஜ், எஸ்.பி. தர்மராஜ் ஆகியோர் வந்தனர். அங்கிருந்த 50க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். பின்னர் புலிகளின் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் நெடுமாறனையும் கைது செய்யப் போவதாக நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் நல்லதுரையிடம் தெரிவித்தனர். இதை அவர் பழ.நெடுமாறனிடம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நெடுமாறனை கைது செய்து போலீசார் அழைத்து சென்றனர்.

No comments:
Post a Comment