இலங்கை::பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் இந்தியாவின் பங்களிப்பு திருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அமர்வுகளில் பங்கேற்காமை ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
துரதிஸ்டவசமாக பிரதமர் பங்கேற்கவில்லை எனவும், அது வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையின் மிக நெருங்கிய நண்பர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆசியர்கள் என்ற ரீதியில் மன்மோகனை அனைவருக்கும் பிடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்ற சில உலகத் தலைவர்களின் கருத்துக்களை பொருட்படுத்தப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இலங்கையின் சாதக மாற்றங்களை பாராட்டியிருந்ததாகவும் இதனை கவனத்திற் கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment