இலங்கை::நாடு என்ற வகையில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகள் முழுமையாக அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை விவகாரங்களில் எதனையும் மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது என அவா குறிப்பிட்டுள்ளார். யாரேனும் மனித உரிமைகளை மீறிச் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய தரப்பினரின் கருத்துக்களை கேட்கத் தயார் எனவும் அதேபோன்று அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் அறிந்து கொள்ள ஏனைய தரப்பினர் முனைப்பு காட்ட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை பிளவுபடுத்த எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 30 ஆண்டுகளாக யுத்தம் நடைபெற்றதாகவும், 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதனை மக்கள் வரவேற்று வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.






No comments:
Post a Comment