Saturday, November 23, 2013

இலங்கை இராணுவத்தின் 54 ஆம் படைப்பிரிவினால் முன்னால் புலிபோராளிகளுக்கு வீடுகள்!

Saturday, November 23, 2013
இலங்கை::இலங்கை இராணுவத்தின் 54 ஆம் படைப்பிரிவினால் (எஸ்.எப்.எச்.கிவ் வன்னி) புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் முன்னால் புலி போராளிகளுக்கு அண்மையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் வழங்கி வைக்கப்பட்டன.
 
வெட்டயமுறிப்பைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான ராமநாதன் ராமேஸ்வரன் மற்றும் பேசாலையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயும் விதவையுமான பாக்கியராசா பிரபா ஆகியோரே வீடுகளைப் பெற்றுக் கொண்டனர்.
 
பெருந் தொகையான புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிபோராளிகள் பல்வேறு அரச நலன்புரி வசதிகளைப் பெற்று வருகின்றதுடன் வர்த்தகத்தை மேற் கொள்வதற்காக இலகு கடன் வசதிகள்,தொழிற்பயிற்சி வழிகாட்டல்கள் என்பவற்றை பெற்றுள்ளனர். மேலும் பாதுகாப்பு சேவை உட்பட பல்வேறு அரச சேவைகளிலும் அவர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment