Tuesday, November 26, 2013

சீனா: 2 கப்பல்கள் கடலில் மூழ்கியதில் 3 பேர் பலி - 25 பேர் மாயம்!

Tuesday, November 26, 2013
பீஜிங்::சீனாவின் ஷண்டாங் மாகாணத்தின் கடற்பகுதியில் 2 கப்பல்கள் மூழ்கிய விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர். 25 பேர் மாயமாகியுள்ளனர்.
கிழக்குக் சீனா பகுதியில் இருந்து கிளம்பிய சரக்குக் கப்பல் ஒன்று நேற்று நள்ளிரவு 9 மணியளவில் மூழ்கியது. கப்பலில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர் 12 மாலுமிகளை காணவில்லை எனக் கூறப்படுகிறது.

88 மீட்டர் நீளமுடைய அந்த கப்பலில் இருந்து கடைசியாக இரவு 8.50 மணிக்கு அவசர அழைப்பு வந்துள்ளதாக கடலோர காவல் படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேபோல் வடக்கு சீனாவின் கடலோர பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சரக்குப் கப்பல் ஒன்று மூழ்கியது. இதில் பயணம் செய்த 14 மாலுமிகளின் கதி என்ன என்பது தெரியவில்லை.

இந்த இரண்டு விபத்துக்களும் பலத்த காற்றினால் ஏற்பட்ட பேரலைகளில் சிக்கி கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இந்த விபத்துகளில் பலியான மூவரின் பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளது. நீரில் மூழ்கி காணாமல் போன 25 பேரை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என ஷண்டாங் மாகாண கடலோர காவல் படை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment