Wednesday, November 27, 2013
இலங்கை::மட்டக்களப்பு-காத்தான்குடி வங்காள விரிகுடா கடற்கரை ஏத்துக்கால் மற்றும் நதியா பீச் பகுதிகளில் இன்று புதன்கிழமை அதிகாலை சுமார் 1.30. ஒரு மணி முப்பது நிமிடமளவில் தீடிரேன ஏற்பட்ட கடுமையான சூறாவளி கடல் கொந்தளிப்பு அனர்த்தத்தால் கடலில் இருந்து 50 மீட்டருக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 படகுகளும்;
5 வெளியின இயந்திரங்களும் காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இவ் கடல் கொந்தளிப்பு அனர்த்தத்தில் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இவ் அனர்த்தம் தொடர்பில் கொழும்பு கடற் தொழில் திணைக்களத்திற்கு இன்று அறிவிக்கவுள்ளதாகவும் இவ் அனர்த்தம் காரணமாக காத்தான்குடி கடற்கரை மீனவர்களுக்கு ஏரத்தாள 1மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இவ் இழப்பீடு தொடர்பில் பொலிஸ் அறிக்கைகளையும் கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இக் கொந்தளிப்பு காரணமாக பாரியளவில் படகுகள் சேதமாக்கப்பட்டடுள்ளதுடன் இயந்திரங்களும் சேதமடைந்து ஒரு சில இயந்திரங்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளது அத்தோடு ஏத்துக்கால் பகுதி மீனவர்களுக்கு இது பாரிய இழப்பாகும் இப்படி ஒரு கடல் கொந்தளிப்பு ஏற்படுவதால் அவர்கள் பதிக்கப்படுவதாகவும் அவர்களுடைய ஜீவனோபாயம் பாதிக்கப்படுகின்றது இதனால் நாங்கள் அவர்களுக்குறிய பதிலீட்டை அல்லது நிவாரனத்தை வழங்குவதற்கு கடற் தொழில் பணிப்பாளர் நாயகத்திற்கு தெரிவிக்கவுள்ளோம் எனவும் தெரிவித்த அவர் ஏனைய மீனவர்களை கவனத்துடனும் இருக்குமாறு கேட்டுகொள்கின்றோம் எனவும் மீனவ மக்கள் மிக்க அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இவ் அனர்த்;தம் தொடர்பில் ஆராய்வதற்கு மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தலைமையிலான குழுவினர் இன்று புதன்கிழமை காலை காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரை பகுதிக்கு விஜயம் செய்து மீனவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
இவ் அனர்த்;தம் தொடர்பில் ஆராய்வதற்கு மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தலைமையிலான குழுவினர் இன்று புதன்கிழமை காலை காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரை பகுதிக்கு விஜயம் செய்து மீனவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
No comments:
Post a Comment