Tuesday, November 19, 2013
இந்த வீடுகள் படையினருக்கான “நமக்காக நாம்” நிதியத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் முதலாவது வீடு நேற்றைய தினம் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு வீட்டுரிமையாளருக்குக் கையளிக்கப்பட்டது.
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினமான நேற்றைய தினம் புலிபயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முப்படை வீரர்களுக்கு 112 வீடுகள் ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டன.
நேற்றைய தினம் இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு ஹோமாகம பிடிபன மகா வித்தியாலய விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு வருகை தந்த ஜனாதிபதி படைவீரர் ஒருவருக்கு உத்தியோகபூர்வமாக வீடொன்றைக் கையளித்து அதற்கான பெயர்ப்பலகையையும் திரைநீக்கம் செய்து வைத்தார்.
அமைச்சர்கள் விமல் வீரவன்ச சுகில் பிரேமஜயந்த ஏ. எச். எம். பெளஸி பந்துல குணவர்தன தினேஷ் குணவர்தன உட்பட அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் மாகாண முதலமைச்சர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உட்பட அமைச்சின் அதிகாரிகள் மற்றும் முப்படையைச் சேர்ந்த உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் 112 படையினருக்கு வீடுகளின் திறப்புகளை ஜனாதிபதி
படையினருக்குக் கையளித்தார்.
இந்த வீடுகள் படையினருக்கான “நமக்காக நாம்” நிதியத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் முதலாவது வீடு நேற்றைய தினம் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு வீட்டுரிமையாளருக்குக் கையளிக்கப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் “நமக்காக நாம்” நிதியம் மூலம் இதுவரை வடக்கு, கிழக்கு உட்பட 17 மாவட்டங்களில் படையினருக்கு வீடுகள் நிர்மானித்து வழங்கப்பட்டுள்ளன.
நேற்றைய நிகழ்வின் படையினரின் வீட்டுத் திறப்புடன் சமையல் உபகரணங்கள் பிள்ளைகளுக்கான கல்வி உபகரணங்களும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டன.
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள், மதத் தலைவர்கள் பலரும் நேற்றைய இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.











No comments:
Post a Comment