Wednesday, October 23, 2013

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் மாநாட்டில் மலேசியா பங்கேற்கும்: மசிதா அஹமட்!

Wednesday, October 23, 2013
இலங்கை::இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் மாநாட்டில் மலேசியா பங்கேற்கும் என உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியா சார்பில் மாநாட்டில் பிரதமர் நஜிப் டன் ரசாக் கலந்து கொள்வார் என மலேசிய வெளிவிவகார செயலக தென்னாசிய பிரிவு உதவி செயலாளர் மசிதா அஹமட் தெரிவித்துள்ளார்.

23 பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நவம்பர் 15ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை கொழும்பில் இடம்பெறவுள்ளது. 



No comments:

Post a Comment