Wednesday, October 23, 2013
இலங்கை::பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது குறைந்துள்ளது.
இந்த அமைச்சுக்கு 2013 ஆம் ஆண்டு 289.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2014 ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் 253 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பு அமைச்சுக்கு 2014 ஆம் ஆண்டு 36.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புதிதாக அமைக்கப்பட்ட 'சட்டம் மற்று ஒழுங்கு' அமைச்சுக்காக 51 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பாதுகாப்பு அமைச்சுக்கு 2011 ஆம் அஒ;டு 215 பில்லியன் ரூபாவும் 2012 ஆம் ஆண்டு 230 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
எனினும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு அடுத்த வருடத்திற்கு கூடுதலாக 253 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சுக்கு இரண்டாவது ஆகக் கூடுதல் நிதியாக 163 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது ஆகக்கூடிய நிதியாக 105 பில்லியன் ரூபா பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சுக்கு 117 பில்லியன் ரூபாவும் கல்வி அமைச்சுக்கு 38 பில்லியன் ரூபாவும் உயர்க் கல்வி அமைச்சுக்கு 29 பில்லியன் ரூபாவும் புதிதாக உருவாக்கப்பட்ட கல்வி சேவைகள் அமைச்சுக்கு 7 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட சீனி கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு ஆகியவற்றிற்கு முறையே 91 மில்லியன், 110 மில்லியன் ரூபாய்க்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் புதிய அமைச்சான வன ஜீவராசிகள் வனப்பாதுகாப்பு அமைச்சுக்கு 1.3 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மேர்வின் சில்வாவின் பொறுப்பிலுள்ள பொதுமக்கள் உறவுகள், பொதுமக்கள் விவகார அமைச்சுக்கு 249 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் மீள் உருவாக்கம் அமைச்சுக்கு 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் மீதான இரண்டாவது வாசிப்பு நவம்பர் 21 ஆம் திகதி இடம்பெறும்.

No comments:
Post a Comment