Wednesday, October 23, 2013
சூரு(ராஜஸ்தான்) ராஜஸ்தான் மாநிலம் சூரு நகரில் இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, தனது பாட்டி இந்திரா காந்தியின் மரணத்தை குறிப்பிட்டு உணர்ச்சிபொங்க பேசினார். அவர் பேசியதாவது:-
வெறுப்புணர்வால் என் ,பாட்டி (இறந்தது 1984.) என் தந்தையும் (1991.).புலிகளினால் கொல்லப்பட்டார். நானும் கொலை செய்யப்படலாம். அதற்காக நான் கவலைப்படமாட்டேன்.
என் பாட்டி சுடப்பட்டதாக என் பாதுகாவலர் தெரிவித்தார். அப்போது என் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. பிரியங்காவும் நானும் உடனடியாக வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். சாலையில் என் பாட்டியின் ரத்தம் சிதறிக் கிடந்தது. அறையில் என் நண்பர்கள் மீதும் ரத்தம் படிந்திருந்தது.
எனது நண்பர்களான பீன்ட்சிங், சத்வந்த் சிங் ஆகியோர் எனக்கு பேட்மிண்டன் விளையாட கற்றுக் கொடுத்தனர். 1984ம் ஆண்டு கார்டனில் நான் பீன்ட் சிங்கை சந்தித்தபோது, அவர் என்னிடம், உன் பாட்டி எங்கே தூங்குவார்? அவருக்கு போதுமான பாதுகாப்பு உள்ளதா? யாராவது உங்கள் மீது வெடிகுண்டு வீசினால் எப்படி தரையில் படுத்து தப்புவீர்கள்? என்று கேட்டார்.
அவர் எந்த அர்த்தத்தில் பேசினார் என்பது எனக்கு அப்போது புரியவில்லை. தீபாவளியின்போது வீசுவதற்காக அவர்கள் வெடிகுண்டை கொண்டு சென்றதன் பொருள் சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் எனக்கு புரிந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments:
Post a Comment