Thursday, October 3, 2013

யாழ். மாநகர சபை ஊழியர்களின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது!

Thursday, October 03, 2013
இலங்கை::யாழ். மாநகர சபை ஊழியர்களின் உண்ணாவிரதம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்துள்ளது.

யாழ். மாநகர சபை ஊழியர்கள் 1ம் திகதி காலை தொடக்கம் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அதனை தொடர்ந்து நேற்று மாலை 4 மணியளவில் மாநகர சபை முதல்வர் தலைமையில் தொழில் திணைக்களமும் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் நன்கு பிரதிநிதிகளும் சந்தித்து கலந்துரையாடினர்.
அக்கலந்துரையாடலை அடுத்து தொழில் திணைக்களத்தால் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என உறுதி மொழி வழங்கப்பட்டது.

அந்த அறிக்கையினை பரிசீலித்து நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு சேவை, மூப்பு, கல்வித்தகைமை ஒழுக்கம் என்பனவற்றின் அடிப்படையில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என முதல்வர் உறுதி மொழி வழங்கினார்.

யாழ். மாநகர சபை முதல்வரின் உறுதிமொழியை அடுத்து தொழிலாளர்கள் தேனீர் அருந்தி தமது உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

No comments:

Post a Comment